தக் லைஃப் படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்

Director Mani Ratnam: தமிழ் சினிமாவில் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருப்பவர் இயக்குநர் மணிரத்னம். இவருடன் பணியாற்ற பிரபலங்கள் பலரும் காத்திருக்கின்றன். இந்த நிலையில் தக் லைஃப் படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் ஒரு தெலுங்கு நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தக் லைஃப் படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்

மணிரத்னம்

Published: 

21 May 2025 11:57 AM

இயக்குநர் மணிரத்னம் (Director Mani Ratnam) நாயகன் படத்திற்கு பிறகு சுமார் 36 வருடங்கள் கழித்து நடிகர் கமல் ஹாசனுடம் கூட்டணி வைத்துள்ளார். தக் லைஃப் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசனும் முன்னணி வேடத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அடுத்த நாயகன் பார்ட் 2 மாதிரி இருக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் அந்த எண்ணத்தை முற்றிலும் மாற்றியது. நாயகன் பாகம் 2 எல்லாம் இல்ல இது வேற மாதிரி ஒரு கேங்ஸ்டர் படம் என்றும் தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றார் போல பல காட்சிகளை ட்ரெய்லரில் பார்க்க முடிந்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் உடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், அபிராமில், சான்யா மல்கோத்ரா, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர் மற்றும் வடிவுக்கரசி என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். தக் லைஃப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளது. இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்:

இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் படத்தை தொடர்ந்து ஒரு முழு நீள காதல் படத்தை எடுக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நாயகனாக நடிக்க உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவர் முன்னதாக தெலுங்கில் ஜாதி ரத்னலு, மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் இயக்குநர் மணிரத்னம் இவரை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் படத்தை இயக்க உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகை சாய் பல்லவியை நடிகையாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாகவும், இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.