Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் விக்ரமின் 63-வது படத்திற்கு நாயகி யார்? குழப்பத்தில் படக்குழு

Actor Vikram: நடிகர் விக்ரம் நடிப்பில் அவரது 63-வது படம் குறித்த அப்டேட் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே அடுத்தடுத்த அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இந்தப் படத்தில் நாயகியாக யார் நடிக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

நடிகர் விக்ரமின் 63-வது படத்திற்கு நாயகி யார்? குழப்பத்தில் படக்குழு
நடிகர் விக்ரம்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2025 10:19 AM

நடிகர் விக்ரம் (Actor Vikram) தற்போது தனது 63-வது படத்திற்காக இயக்குநர் மடோன் அஸ்வின் உடன் இணைந்து கூட்டணி வைத்துள்ளனர். இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகரக்ளிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா மற்றும் மாவீரன் என இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் நடிகர் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வீர தீர சூரன். இந்தப் படத்தை இயக்குநர் அருண் குமார் இயக்கியிருந்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்ரமின் 63-வது படத்திற்கு நாயகி யார் என்று தேர்வு செய்வதில் படக்குழுவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விக்ரமின் 63-வது படத்தில் நாயகியாக நடிப்பதற்காக முன்னதாக நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரியங்கா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைப்பெற்றது. இந்த பேச்சு வார்த்தை முடிவுக்கு வராத நிலையில் தற்போது நடிகை மீனாட்சி சௌத்ரி உடன் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் விக்ரமின் இன்ஸ்டா பதிவு:

 

View this post on Instagram

 

A post shared by Vikram (@the_real_chiyaan)

விக்ரம் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள்:

நடிகர் விக்ரம் 1990-ம் ஆண்டு முதல் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலரது இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான சேது, காசி, தில், ஜெமினி, சாமுராய், தூள், சாமி, பிதாமகன், அருள், அந்நியன், ராவணன் என பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

ஒவ்வொரு படத்திற்காகவும் தனது உடல் எடையை கூட்டுவதும் குறைப்பதும் என ரசிகர்களை தொடர்ந்து வியப்பில் ஆழ்த்துவார் நடிகர் விக்ரம். படத்திற்காக விக்ரம் மெனெக்கடும் விசயங்கள் மற்ற நடிகர்களுக்கு ஒரு மோட்டிவேஷனாம இருக்கும். ஹேட்டர்ஸே இல்லாத ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் தான் என்று அவரே பல மேடைகளில் தெரிவித்துள்ளார்.

விக்ரம் நடிப்பில் ஹிட் அடித்த வீர தீர சூரன்:

நடிகர் விக்ரம் நடிப்பில் 27-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வீர தீர சூரன் பாடம் 2. இந்தப் படத்தை இயக்குநர் அருண் குமார் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ப்ருத்வி ராஜ் மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் சுராஜ் வெஞ்சாரமூடு தமிழ் படத்தில் அறிமுகம் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து மணிரத்னம் கொடுத்த
தக் லைஃப் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து மணிரத்னம் கொடுத்த...
கருத்தரிப்பதில் பொதுவாக நிகழும் 7 தவறுகள் என்னென்ன?
கருத்தரிப்பதில் பொதுவாக நிகழும் 7 தவறுகள் என்னென்ன?...
"பாகிஸ்தானுடன் வர்த்தம், பேச்சுவார்த்தை இல்லை” பிரமர் மோடி
ஏற்காடு 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி எப்போது?
ஏற்காடு 48-வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி எப்போது?...
வாழ்க்கையில் இந்த 5 பேரிடம் கவனமாக இருங்கள்..!
வாழ்க்கையில் இந்த 5 பேரிடம் கவனமாக இருங்கள்..!...
டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை
டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை...
அதிகப்படியான தாகம் சர்க்கரை நோயின் அறிகுறியா? முக்கிய காரணங்கள்!
அதிகப்படியான தாகம் சர்க்கரை நோயின் அறிகுறியா? முக்கிய காரணங்கள்!...
வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றினால் இவ்வளவு பலன்களா?
வீட்டில் காமாட்சி விளக்கு ஏற்றினால் இவ்வளவு பலன்களா?...
பிளே ஆஃப்க்குள் கால் வைத்த மும்பை.. டாப் 2க்கு போராடும் அணிகள்..!
பிளே ஆஃப்க்குள் கால் வைத்த மும்பை.. டாப் 2க்கு போராடும் அணிகள்..!...
காஞ்சிபுரம்: கடனுக்காக குத்தகைக்கு விடப்பட்ட மகன், சோகமான மரணம்.!
காஞ்சிபுரம்: கடனுக்காக குத்தகைக்கு விடப்பட்ட மகன், சோகமான மரணம்.!...
அமெரிக்காவில் பரபரப்பு.. இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொலை!
அமெரிக்காவில் பரபரப்பு.. இஸ்ரேல் தூதரக அதிகாரிகள் சுட்டுக் கொலை!...