Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தக் லைஃப் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து மணிரத்னம் கொடுத்த அப்டேட்

(Director Maniratnam) இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் தக் லஃப். இந்தப் படத்தில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அவரது கதாப்பாத்திரம் குறித்து இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தக் லைஃப் படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் குறித்து மணிரத்னம் கொடுத்த அப்டேட்
தக் லைஃப்Image Source: social media
vinothini-aandisamy
Vinothini Aandisamy | Published: 22 May 2025 13:46 PM

தக் லைஃப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் தொடர்ந்து படம் குறித்து பேட்டிகளில் பேசி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) சமீபத்தில் சினிமா விகடனுக்கு  அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அந்தப் பேட்டியில் த்ரிஷா கிருஷ்ணனின் கதாப்பாத்திரம் குறித்தும் இயக்குநர் மணிரத்னம் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது இந்தப் படம் குறித்து நடிகை த்ரிஷாவிடம் பேசியபோது இதில் வருக் கதாப்பாத்திரம் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த குந்தவை கதாப்பாத்திரத்திற்கு நேர் எதிரான கதாப்பாத்திரம் தான் இந்தப் படத்தில் என்று மணிரத்னம் திரிஷாவிடம் கூறியுள்ளார். அதற்கு த்ரிஷா ஒப்புக்கொண்ட பிறகே இந்தப் படத்தின் பணிகள் தொடங்கியதாகவும் மணிரத்னம் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குந்தவை டூ சுகர் பேபி:

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் நடிகை த்ரிஷா இளவரசி குந்தவையாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரது தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மேலும் நடிகை த்ரிஷாவின் நடிப்பும் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் மணிரத்னம் தற்போது இயக்கியுள்ள தக் லைஃப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இது ட்ரெய்லரைப் பார்க்கும் போதே ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக நேற்று த்ரிஷாவின் சுகர் பேபி பாடலையுல் படக்குழு வெளியிட்டிருந்தது.

தக் லைஃப் ட்ரெய்லரால் சர்ச்சையில் சிக்கிய த்ரிஷா:

தக் லைஃப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு கடந்த 17-ம் தேதி வெளியிட்டது. இதில் கமல் ஹாசனுடன் நடிகை த்ரிஷா ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தன்னை விட 30 வயது அதிகமான ஆண் உடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கிறார் என்று தொடர்ந்து ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள சுகர் பேபி என்ற பாடலை நேற்று 21-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு வெளியிட்டு சர்ச்சைகளுக்கு மேலும் தீணி போட்டது படக்குழு. இந்தப் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நெற்றி குங்குமம்... தங்கம், வைர புடவையால் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்..
நெற்றி குங்குமம்... தங்கம், வைர புடவையால் ஜொலித்த ஐஸ்வர்யா ராய்.....
10 வருடத்தைக் கடந்த டிமாண்டி காலனி 1.. நன்றி தெரிவித்த இயக்குநர்!
10 வருடத்தைக் கடந்த டிமாண்டி காலனி 1.. நன்றி தெரிவித்த இயக்குநர்!...
இணைய வசதியே இல்லாமல் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம் - எப்படி?
இணைய வசதியே இல்லாமல் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம் - எப்படி?...
இந்த வகை மீன்களை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்!
இந்த வகை மீன்களை வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்!...
குக்கரில் எந்தெந்த பொருட்களை சமைக்கக்கூடாது?
குக்கரில் எந்தெந்த பொருட்களை சமைக்கக்கூடாது?...
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மே 29 முதல் விண்ணப்பிக்கலாம்!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற மே 29 முதல் விண்ணப்பிக்கலாம்!...
அஜித் படத்தின் கிளைமேக்ஸ்.. சிம்பு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
அஜித் படத்தின் கிளைமேக்ஸ்.. சிம்பு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!...
இணையத்தில் கவனம் பெறும் நடிகை ராஷ்மிகாவின் இன்ஸ்டா பதிவு
இணையத்தில் கவனம் பெறும் நடிகை ராஷ்மிகாவின் இன்ஸ்டா பதிவு...
பாஜகவினர் இனி அதிமுகவை விமர்சிக்கக் கூடாது - நயினார் நாகேந்திரன்
பாஜகவினர் இனி அதிமுகவை விமர்சிக்கக் கூடாது - நயினார் நாகேந்திரன்...
பதஞ்சலி தந்த் காந்தி பேஸ்ட்டை விரும்ப காரணம்.. மக்களின் பதில் இதோ
பதஞ்சலி தந்த் காந்தி பேஸ்ட்டை விரும்ப காரணம்.. மக்களின் பதில் இதோ...
இளம் கேப்டன் தலைமை! இங்கிலாந்து எதிரான இந்திய அணி அறிவிப்பு..!
இளம் கேப்டன் தலைமை! இங்கிலாந்து எதிரான இந்திய அணி அறிவிப்பு..!...