தியேட்டர் ரிலீஸில் இருந்து 8 வாரத்திற்கு பிறகே ஓடிடி ரிலீஸ் – தக் லைஃப் குறித்து அப்டேட் கொடுத்த கமல் ஹாசன்
Thug Life Movie OTT Update: கமல் ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் தக் லைஃப். மும்பையில் நடைப்பெற்ற தக் லைஃப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன் படத்தின் ஓடிடி வெளியீடு எப்போது இருக்கும் என்பது குறித்து அப்டேட்டை தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் (Kamal Haasan) நடிப்பில் தற்போது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் படம் தக் லைஃப். இந்தப் படத்தை இயக்குநர் மணி ரத்னம் இயக்கியுள்ளார். தக் லைஃப் படத்தில் நடிகர் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர் சிலம்பரசன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அதன்படி படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அதில் சமீபத்தில் மும்பையில் நடைப்பெற்ற படத்தின் புரமோஷன் விழாவில் தக் லைஃப் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து கமல் ஹாசன் பேசியுள்ளார். அதில் படம் வெளியாகி 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியிடப்படும் என்றும் இதற்கு நெட்ஃபிளிக்ஷ் நிறுவனமும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படம் 8 வாரத்திற்கு பிறகு ஓடிடியில் வெளியாக காரணம் என்ன?
தமிழ் சினிமா மற்றும் தென்னிந்திய மொழி சினிமாவில் ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்றால் அந்தப் படம் வெளியானதில் இருந்து 4 வாரங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியிடும் வழக்கம் உள்ளது. ஆனால் இந்தி சினிமாவைப் பொருத்தவரை ஒரு படம் தியேட்டரில் வெளியாகிறது என்றால் அது தியேட்டரில் வரவேற்பைப் பெற்று வெற்றியடையுதோ இல்லையோ 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.
தக் லைஃப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Power-packed launch of #ThuglifeTrailer in Mumbai
#ThuglifeAudioLaunch from May 24
ThuglifeTrailer
➡https://t.co/Xy1tm87OuO#Thuglife #ThuglifeFromJune5 #KamalHaasan… pic.twitter.com/iPW54unwwK— Raaj Kamal Films International (@RKFI) May 20, 2025
தமிழ் மற்றும் தென்னிந்திய மொழி படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் அது 4 வாரங்களிலேயே ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகி விடும். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் பல முறை கோரிக்கை வைத்தாலும் இந்த வழக்கம் மாறவில்லை. அதே போல தென்னிந்திய மொழி படங்களின் இந்திப் பதிப்பை வெளியிட வேண்டும் என்றால் அது 8 வார ஓடிடி வெளியீட்டிற்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே திரையரங்குகள் ஒதுக்கப்படும்.
இந்திப் பதிப்பில் படத்தை வெளியிட இது கட்டாயம்:
தென்னிந்திய மொழிகளில் உருவாகும் படங்களை இந்தியில் வெளியிட வேண்டும் என்றால் அந்தப் படம் 8 வாரத்திற்கு பிறகே ஓடிடியில் வெளியிட வேண்டும். இந்த கண்டிஷனுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே இந்தி திரையுலகில் தென்னிந்திய மொழி படங்களுக்கு அதிக அளவில் திரையரங்குகள் ஒதுக்கப்படும். இல்லை என்றால் குறைவான தியேட்டர்களே ஒதுக்கப்படும்.
தக் லைஃப் ஓடிடி குறித்து கமல் ஹாசன் சொன்ன அப்டேட்:
அதன்படி மும்பையில் தக் லைஃப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் வெளியாகும் என்றும் இதற்கு தக் லைஃப் படத்தின் ஓடிடி உரிமையைப் பெற்ற நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இந்திப் பதிப்பில் தக் லைஃப் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. மேலும் பான் இந்திய அளவில் படம் வெளியாவதால் வசூலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.