Actor Soori : விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த நடிகர் சூரி!

Soori About Vijay TVK Party : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நாயகனாக இருந்து, தற்போது அருமையான படங்களைக் கொடுக்கும் ஹீரோவாக இருப்பவர் சூரி. இவரின் நடிப்பில் இறுதியாக மாமன் படம் வெளியானது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய்யின் கட்சி குறித்த கேள்விக்கு அவர் கொடுத்த பதில் வைரலாகி வருகிறது.

Actor Soori : விஜய்யின் கட்சி குறித்த கேள்வி.. எதிர்பாராத பதிலளித்த நடிகர் சூரி!

நடிகர் விஜய் மற்றும் சூரி

Published: 

18 May 2025 12:11 PM

நடிகர் சூரியின் (Soori) முன்னணி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மாமன் (Maaman). இந்த படத்தின் கதையை நடிகர் சூரி எழுதியுள்ள நிலையில், இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் (Prashanth Pandiaraj) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விமலின் விலங்கு என்ற வெப் தொடரை இயக்கி வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து நடிகர் சூரியின் இந்த மாமன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படமானது கடந்த 2025, மே 16ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த படமானது முழுக்க முழுக்க செண்டிமெண்ட் காட்சிகளுடன் மிகவும் அருமையாக அமைந்துள்ளது. இந்த படமானது கிராமம் முதல் சிட்டி வரை இருக்கும் அனைத்து ரசிகர்களையும் ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூரியுடன் ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி (Aishwarya Lakshmi)  நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தில் நன்றாகவே இருந்து என்று கூறலாம்.

இதைத் தொடர்ந்து நடிகர் சூரியின் இந்த படம் வெற்றி பெற மதுரையில் ரசிகர்கள் சிலர் மண் சோறு சாப்பிட்டு, வேண்டுதல்களை வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து நடிகர் சூரி அவர்களைக் கண்டித்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தனது ரசிகராக இருப்பதற்கே தகுதி இல்லை என்றும் கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்களைச் சூரி சந்தித்திருந்தார்.

நடிகர் சூரி கொடுத்த பதில் :

அதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்  (Tamilaga Vettri Kazhagam) கட்சியின் சார்பாக நடிகர் விஜய் பிரச்சாரத்திற்கு அழைத்தல் , செல்வீர்களா என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் சூரி, “அண்ணன் சரியான வழியில் சென்றுகொண்டு இருக்கிறார், ஆனால் எனக்கு தொடர்ந்து நிறையப் படங்களில் நடிப்பதற்கு வேலைகள் அதிகமாக இருக்கிறது” என்று பதிலளித்துள்ளார். தற்போது இந்த விஷமானது ரசிகர்களை மத்தியில் வைரலாகி வருகிறது.

மாமன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு :

நடிகர் சூரியின் இந்த மாமன் படத்தில் அவருடன் நடிகர்கள் ராஜ் கிரண், ஸ்வாஸிகா, பாபா பாஸ்கர், பாலா சரவணன், கீதா கைலாசம் மற்றும் நடிகை அஸ்லவர்யா லட்சுமி உட்படப் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படத்தின் கதையானது சுமார் 10 வருடங்களுக்கும் மேலாகக் குழந்தை இல்லாமல் தவிக்கும் அக்காவிற்குப் பிறக்கும் குழந்தையையை வைத்துத்தான் இந்த படத்தின் கதைக்களம் மொத்தமும் நகர்கிறது. இதற்கிடையே நடக்கும் சுக துக்கங்களைக் கொண்டுதான் இந்த பணமானது நகர்கிறது. இந்த படமானது 2 வது நாளாகத் திரையரங்குகளில் வெற்றியடை பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது