சிவகார்த்திகேயன் உடன் இணையும் பிரபல மலையாள நடிகர்? இணையத்தில் வைரலாகும் தகவல்
நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி படம் அடுத்ததாக வெளியீட்டிற்கு காத்திருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் தற்போது பராசக்தி படத்தில் பணியாற்றி வருகின்றார்.

விநாயக் சந்திரசேகர். சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவரது நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாகவுள்ள படம் மதராஸி. இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் (AR Murugadoss) இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் செப்டமர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ருக்மணி வசந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், ஷபீர் கல்லாரக்கல், விக்ராந்த், பிரேம் குமார், சஞ்சய், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் சிவகார்த்திகேயனின் 23-வது படமா இதுக்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். பல நாட்களுக்கு முன்பு தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு காரணமாக முடிவடைய தாமதம் ஆனது.
ஏ.ஆர்.முருகதாஸ் சிக்கந்தர் படத்தில் பிசியாக இருந்ததால் மதராஸி படத்தின் வேலைகள் தாமதம் ஆனது. அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் 24-வது படத்தை யார் இயக்க உள்ளது என்ற கேள்வி கோலிவுட் சினிமாவில் உலா வரத் தொங்கியது. ஆனால் அது இயக்குநர் வெங்கட் பிரபுவா அல்லது குட் நைட் பட இயக்குநர் விநாயக் சந்திரசேகரா என்ற கேள்விகள் இருந்து வந்த நிலையில் தற்போது விநாயக் சந்திரசேகர் என்று உறுதி செய்ப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தப் படத்தின் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. இந்தப் படத்தின் சமீபத்திய அப்டேட் என்ன என்றால். இந்தப் படத்தில் மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அப்பா மகன் பாசம் மிகவும் வலுவாகப் பேசப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நடிகர் மோகன்லால் தமிழில் ஜில்லா படத்தில் நடிகர் விஜயின் தந்தையாக நடித்திருந்தார். இந்த காம்போ ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் செய்தி:
As per VP,
– #Sivakarthikeyan‘s #SK24 story is based on Father-Son bonding ♥️✨
– Talks going on with #Mohanlal to cast for father’s role as it’s strong role🌟
– Directed by Vinayak Chandrasekhar & Produced by Passion Studios 🎬 pic.twitter.com/Mr77iIBb7a— AmuthaBharathi (@CinemaWithAB) May 10, 2025
மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் 24-வது படத்தை இறுதி செய்வதற்கு முன்பே தனது 25-வது படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்தார். இந்தப் படத்திற்கு பராசக்தி என்று பெயர் வைத்துள்ளனர். இந்தி எதிர்ப்புக் கொள்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடிகர்கள் ரவி மோகன் , அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் ஸ்ரீலீலா தமிழில் அறிமுகம் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் நிலையில் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.