Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : அந்த ரோலில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்.. நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Sivakarthikeyans Untold Story : நடிகர் சிவகார்த்திகேயன் என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. ஆரம்பத்தில் காமெடியனாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். அதை தொடர்ந்து ஹீரோவாக தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக ரெமோ திரைப்படத்தில் பெண் வேடத்தில் நடித்ததை குறித்துப் பேசியிருந்தார். அதை குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

Cinema Rewind : அந்த ரோலில் நடிக்கும்போது ரொம்ப கஷ்டப்பட்டேன்.. நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!
நடிகர் சிவகார்த்திகேயன்
barath-murugan
Barath Murugan | Updated On: 01 May 2025 15:35 PM

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகனாக கலக்கி வருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் தற்போது பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாகி பான் இந்திய அளவிற்கு மிகவும் பிரபலமான திரைப்படம் அமரன் (Amaran). இந்த படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி  (Rajkumar Periyasamy) இயக்கியிருந்தார். இந்த படமானது எதிர்பார்த்ததைவிட அதிகம் வசூல் செய்து சூப்பர் சாதனை படைத்தது. இந்த படத்துக்கு முன் நடிகர் சிவகார்த்திகேயன் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் நடித்து வந்தார். அமரன் படத்தைத் தொடர்ந்து, உச்ச நடிகர்களைப் போல ஆக்ஷ்ன் படங்களில்  (action films) நடிக்கத் தொடங்கிவிட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஆக்ஷ்ன் படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் மட்டும் 2 படங்கள் தயாராகி வருகிறது. மேலும் இவரின் ஹிட் படங்களில் மறக்கமுடியாத படமாக இருப்பது ரெமோ (Remo).

கடந்த 2016ம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகக் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பில் இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்ததை குறித்துப் பேசியிருப்பார்.

சிவகார்த்திகேயனின் இன்ஸ்டாகிராம் பதிவு

 

அதில் அவர் நடிகைகள் ஏன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு லேட்டாக வருகிறார்கள் என்று, ரெமோ படத்தில் நடிக்கும்போதுதான் தெரிந்தது என்று அவர் நகைச்சுவையாகப் பேசியிருந்தார். அவர் பேசியதை முழுமையாகப் பார்க்கலாம்.

ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்ததை அனுபவம் குறித்து சிவகார்த்திகேயன் சொன்ன விஷயம் :

முன்னதாக பேசியிருந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் “திரைப்படங்களில் நடிப்பதற்கு ஹீரோயின்ஸ் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்று ரெமோ படத்தில் நடிக்கும்போதுதான் தெரிந்துகொண்டேன். ஏனென்றால் ரெமோ படத்தில் நர்ஸ் வேடத்திற்கு மேக்கப் போடுவதற்கே பல மணி நேரமாகும், இயக்குநர் என்னை ஒரு இளம் பெண் மாதிரி காட்ட சொன்ன நிலையில், மேக்கப் ஆர்ட்டிஸ்ட் என்னை வைத்துச் செய்துவிட்டார்.  அந்த மேக்கப் போடுவதற்கு பல மணிநேரமாகும், மேலும் அந்த படத்தில் நடிப்பதற்கு எனக்குப் பிடித்த உணவுகளைச் சாப்பிடாமல் பல நாட்களாக இருந்தேன்.

ஏனென்றால் இளம் பெண் போல நடிப்பதற்கு எடையைக் குறைத்தால்தான் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் கூறினார். அதனால் பல நாள் பட்டினியாகத்தான் கிடந்தேன். அப்போதுதான் புரிந்தது நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்குப் பல பிடித்தவற்றை ஒதுக்கினால்தான் அவர்கள் நடிகையாக இருக்கமுடியும் என்று புரிந்துகொண்டேன். விக்ரம் சார் அந்நியன் படத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது, நான் ரெமோ படத்தில் நடித்தபோது முழுமையாகப் புரிந்துகொண்டேன் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியிருந்தார்.

மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!
மன அமைதியே முக்கியம்.. Waves மாநாட்டில் அல்லு அர்ஜூன் ஓபன் டாக்!...
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி
இணையத்தில் கவனம் பெறும் நடிகர் அஜித் குமாரின் பேட்டி...
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி
கமல் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் - ஓபனாக பேசிய சிரஞ்சீவி...
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!
ஹிட் 3 படத்தின் வெற்றி... நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!...
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?
பிளே ஆஃப் கனவுடன் RCB, KKR.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா CSK..?...
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!
ஒன்று சேரும் 4 கிரகங்கள்.. இந்த 6 ராசிக்கு கிடைக்கும் பலன்கள்!...
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!
எனக்கு அந்த ரோலில் நடிக்கவேண்டும் என்று ஆசை.. நடிகை ரேவதி!...
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு
14 வருடங்களுக்கு பிறகு மதுரையில் விஜய்! ரசிகர்கள் உற்சாக வரவேற்பு...
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
கம்பேக் கொடுத்த சூர்யா.. ரெட்ரோ எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்...
பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்......
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!
இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த கோலி!...