Kuberaa : தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. ‘குபேரா’ படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

Kuberaa Teaser Release Update : கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தெலுங்கு மொழியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குபேரா. இந்த படமானது விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

Kuberaa : தனுஷ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. குபேரா படத்தின் டீசர் ரிலீஸ் எப்போது தெரியுமா?

தனுஷின் குபேரா

Updated On: 

24 May 2025 10:42 AM

பான் இந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருபவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானாலும், தொடர்ந்து இந்தி, தெலுங்கு மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் படங்களில் நடித்தும் வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் ராயன் (Raayan). இந்த படத்தை நடிகர் தனுஷே இயக்கி அதில் முன்னணி நாயகனாக நடித்திருந்தார். இந்த படமானது அண்ணன், தம்பி மற்றும் தங்கை உறவுகளை அடிப்படையாக கொண்டு வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு முன்பே நடிகர் தனுஷ் கமிட்டான தெலுங்கு திரைப்படம்தான் குபேரா (Kuberaa). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் சேகர் கம்முலா (Shekhar Kammula) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna) நடித்துள்ளார்.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகார்ஜுனா, ஜிம் சார்பா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் தெலுங்கு சினிமாவில் பல பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், படமானது வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் டீசர் நாளை 2025, மே 25 வெளியாகவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள அறிவிப்பு :

இயக்குநர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் அறிவிப்பானது கடந்த 2021ம் ஆண்டிலே வெளியானது. அதை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் படிப்படியாக நடந்து வந்த நிலையில், வரும் 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதிலும் முக்கியமாகப் பிச்சைக்காரன் போல இந்த படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நேஷனல் க்ரஸ் நடிகை ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ளார்.

நடிகர் தனுஷ் ஏற்கனவே இந்தி மொழியில் நடித்து 2 ஹிட் படங்களைக் கொடுத்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்த குபேரா படத்தின் மூலம் தெலுங்கிலும் மக்கள் மனதில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் , தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் சுமார் 7 மேற்பட்ட படங்களைத் தனது கைவசம் வைத்துள்ளார். அது தொடர்பான அறிவிப்புகளும் சமீப காலமாக வெளியாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.