குபேரா படத்தை பல கோடிகள் கொட்டி வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்?

Actor Dhanush: நடிகர் தனுஷ் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ராயன். இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஒன்று இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் குபேரா மற்றொன்று அவரே இயக்கி நடிக்கும் இட்லி கடை ஆகும்.

குபேரா படத்தை பல கோடிகள் கொட்டி வாங்கிய பிரபல ஓடிடி நிறுவனம்?

குபேரா

Published: 

19 May 2025 10:51 AM

நடிகர் தனுஷ் (Actor Dhanush) நடிப்பில் தற்போது ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள படம் குபேரா. இந்தப் படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து டோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் நாகர்ஜுனா மற்றும் ரசிகர்களால் அன்புடன் நேஷ்னல் க்ரஷ் என்று அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் தலீப் தஹில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். முன்னதாக படத்தில் நடிகர் தனுஷின் அறிமுக போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. முற்றிலும் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் பிச்சைக்காரரைப் போல தோற்றமளித்தார்.

இந்தப் படத்தை இயக்குநர் சேகர் கம்முலா உடன் இணைந்து சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து முன்னதாக போய்வா நண்பா என்ற பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி ரசிகரகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

குபேரா படத்தை பெரும் தொகைக்கு வாங்கிய ஓடிடி?

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான பிறகு ஓடிடி வெளியீடுகள் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதன்படி தனுஷின் குபேரா படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான அமேசான் ப்ரைம் வீடியோ ரூபாய் 50 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஓடிடி நிறுவனங்களிடையே போட்டிகள் நிலவியதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

நடிகர் தனுஷின் இன்ஸ்டா பதிவு:

தனுஷ் இயக்கத்தில் உருவாகும் இட்லி கடை:

நடிகர் தனுஷ் குபேரா படத்தில் நடித்து வரும் போதே இட்லி கடை படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, பிரகாஷ் ராஜ், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படம் முன்னதாக ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் படத்தில் சில முக்கிய காட்சிகள் படமாக்க தாமதம் ஆனதால் படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைத்தனர். அதன்படி படம் தற்போது அக்டோபர் மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.