Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

Kuberaa : அதிரடி நாயகனாக தனுஷ்.. ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியானது!

Kuberaa Movie Teaser : கோலிவுட் சினிமாவையும் கடந்து, நடிகர் தனுஷ் நடித்துள்ள தெலுங்கு திரைப்படம்தான் குபேரா. இந்த படமானது மாறுபட்ட கதைக்களத்தில், இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். தனுஷுடன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு டீசரை வெளியிட்டுள்ளது.

Kuberaa : அதிரடி நாயகனாக தனுஷ்.. ‘குபேரா’ படத்தின் டீசர் வெளியானது!
குபேரா படத்தின் டீசர்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 25 May 2025 16:20 PM

தெலுங்கு திரைத்துறையில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் சேகர் கம்முலா (Sekhar kammula). இவரின் இயக்கத்தில் புதிதாக உருவாகியுள்ள திரைப்படம் குபேரா (Kuberaa). இந்த படத்தில் நடிகர் தனுஷ் (Dhanush) மற்றும் நாகார்ஜுனா (Nagarjuna) முன்னணி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna)  நடித்துள்ளார். இவர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படமானது, முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் பிச்சைக்காரனாக நடித்துள்ளார். மேலும் மற்றொரு வேடத்திலும் தனுஷ் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்புகள் கடந்த 2021ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுமார் 4 வருடமாக இந்த குபேரா படம் தயாராகி வந்தது.

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் 2025, ஜூன் 20ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம், தமிழ், இந்தி , மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், படக்குழு படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த டீசரானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷின் குபேரா படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

நடிகர் தனுஷ், தமிழ்ப் படங்களைத் தொடர்ந்து இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்தது வருகிறார்.  அந்த படங்களைத் தொடர்ந்து தெலுங்கில் இவர் முன்னணி நாயகனாக நடித்துள்ள முதல் படம் குபேரா. இந்த படமானது பணம் மற்றும் அதனை சுற்றி நடக்கும் விஷயங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுடன், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் ஷார்ப், தாலிப் தஹில் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ், இந்த படத்தைத் தொடர்ந்து இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷின் நடிப்பில் தமிழில் இட்லி கடை படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படமும் வரும் 2025, அக்டோபர் 1ம் தேதியில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் தனது கைவசத்தில், டி55, டி56, போர் தொழில் இயக்குநருடன் ஒரு திரைப்படம், வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம், இளையராஜா பயோபிக், அப்துல்கலாம் பயோபிக் எனத் தனது கைவசத்தில் சுமார் 7 படங்கள் வீதம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!
நினைத்தது நிறைவேறும்.. உறையூர் வெக்காளியம்மன் கோயில் சிறப்புகள்!...
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?
அமெரிக்காவிற்கு சென்ற ஏர் இந்தியா விமான கருப்பு பெட்டி.. ஏன்?...
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!
சஷ்டி விரதம் இருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்!...
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...