மைக்ரோ SIP.. தினமும் வெறும் ரூ.10 முதலீட்டை தொடங்கலாம்.. தெரிஞ்சுக்கோங்க! | TV9 Tamil News

மைக்ரோ SIP.. தினமும் வெறும் ரூ.10 முதலீட்டை தொடங்கலாம்.. தெரிஞ்சுக்கோங்க!

Updated On: 

28 Feb 2026 16:17 PM

 IST

You Can Invest Daily 10 Rupees In Micro SIP | தற்போது எஸ்ஐபி முதலீடு தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால், எஸ்ஐபியில் அதிக தொகை முதலீடு செய்ய வேண்டும் என நினைத்து பெரும்பாலானவர்கள் முதலீடு செய்யாமல் இருக்கின்றனர்.

1 / 5நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்றால் அனைவரும் முதலீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆனால், பெரும்பாலானவர்கள் முதலீடு செய்வதற்கு அதிக தொகை தேவைப்படும் என நினைத்துக்கொண்டு முதலீடு செய்யாமலே இருந்து வருகின்றனர். ஆனால், மைக்ரோ எஸ்ஐபிகளில் மிக குறைந்த அளவில் இருந்தே முதலீடு செய்ய முடியும். 

நிதி பாதுகாப்பு பெற வேண்டும் என்றால் அனைவரும் முதலீடு செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. ஆனால், பெரும்பாலானவர்கள் முதலீடு செய்வதற்கு அதிக தொகை தேவைப்படும் என நினைத்துக்கொண்டு முதலீடு செய்யாமலே இருந்து வருகின்றனர். ஆனால், மைக்ரோ எஸ்ஐபிகளில் மிக குறைந்த அளவில் இருந்தே முதலீடு செய்ய முடியும். 

2 / 5

முதலீட்டை பொருந்தவரை அதிக தொகை தான் முதலீடு செய்ய வேண்டும் என்று அரத்தமில்லை. சிறிய தொகையை நீண்ட நாட்கள் எந்த வித தடையும் இன்றி தொடர்ந்து முதலீடு செய்துவரும் பட்சத்தில், கூட்டு வட்டியுடன் சேர்த்து அதிக நிதியை பெற முடியும். எனவே சிறிய நிதி என நினைக்காமல் முதலீடு செய்ய வேண்டும். 

3 / 5

உதாரணமாக நீங்கள் தினமும் ரூ.10 சேமிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் அந்த முதலீட்டை ஐந்து ஆண்டுகளுக்கு தொடரும் பட்சத்தில் ரூ.25,000 ஆக இருக்கும். இதுவே ரூ.20 சேமிக்கிறீர்கள் என்றால் அது ரூ.50,000 ஆகவும், இதுவே ரூ.50 சேமிக்கிறீர்கள் என்றால் அது ரூ.1.25 லட்சமாகவும் மாறும். 

4 / 5

இத்தகைய மைக்ரோ எஸ்ஐபி திட்டங்களின் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆக மாறிவிட முடியாது. ஆனால், குறைந்த முதலீட்டை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு செய்து வந்தால் நிச்சயம் திட்டமிட்ட ஆண்டுக்குள் அது வட்டியுடன் சேர்த்து நல்ல பலனை தரும். 

5 / 5

சாமானிய மக்களால் மாதந்தோறும் ரூ.5,000, ரூ.10,000 முதலீடு செய்ய முடியாது. ஆனால், தினந்தோறும் ரூ.10 முதலீடு செய்வது மிகவும் எளிதான ஒன்றாக இருக்கும். எனவே நிலையான வருமானம் இல்லாதவர்கள், குறைந்த அளவு முதலீடு செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் இந்த மைக்ரோ எஸ்ஐபி திட்டங்களில் முதலீடு செய்யலாம்.   

Follow Us