Fixed Deposit : ரெப்போ வட்டியை குறைத்த வங்கிகள்.. இருப்பினும் FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

Banks Offers High Interest Rates for Fixed Deposit Schemes | கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்த நிலையில், பல வங்கிகள் தங்களின் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இந்த நிலையில் எஃப்டி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit : ரெப்போ வட்டியை குறைத்த வங்கிகள்.. இருப்பினும் FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

04 May 2025 17:23 PM

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் பொதுமக்களின் நலனுக்காக நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit) திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும் என்பதால் ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) சமீபத்தில் ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை குறைத்து அறிவித்தது. அதாவது 6.25 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை வெறும் 6 சதவீதமாக குறைத்தது. இதன் காரணமாக வங்கிகள் தங்களது நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்துள்ளன. இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டதற்கு பிறகு சிறந்த வட்டியுடன் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தும் வங்கிகள் குறித்த விரிவாக பார்க்கலாம்.

FD திட்டங்கள் – சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள்

நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 7 சதவீதத்திற்கு மேல் வட்டி வழங்கப்படும் வங்கிகள் குறித்தும், அந்த திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

HDFC வட்டி விகிதங்கள்

  • 15 முதல் 18 மாதங்கள் வரையிலான திட்டத்திற்கு 7.10 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 18 மாதங்கள் முறை 21 மாதங்கள் வரையிலான திட்டத்திற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 21 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ICICI வட்டி விகிதங்கள்

  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான திட்டத்திற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 6.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.

SBI வட்டி விகிதங்கள்

  • 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 6.70 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 6.90 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

மேற்குறிப்பிட்ட இந்த அனைத்து வங்கிகளும் குறுகிய கால அளவீடுகளை கொண்ட திட்டங்களுக்கு மிக குறைந்த வட்டி விகிதங்களை வழங்கும் நிலையில், அதிக கால அளவீடு கொண்ட திட்டங்களுக்கு சிறந்த வட்டியை வழங்குகின்றன. இந்த அனைத்து திட்டங்களுக்கும் மூத்த குடிமக்களுக்கு சிறந்த வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.