நெய், சோப்பு போன்ற பொருட்களின் விலை குறைகிறதா? ஜிஎஸ்டியில் மாற்றம்?

GST Relief on Essentials : மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களில் பெரிய மாற்றத்தை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 12% ஜிஎஸ்டி விகிதத்தில் உள்ள நெய், சோப்பு, ஸ்நாக்ஸ் போன்ற அத்தியாவசிய பொருட்களை 5% விகிதத்துக்குள் கொண்டு வர திட்டமிடப்படுவதாக கூறப்படுகிறது.

நெய், சோப்பு போன்ற பொருட்களின் விலை குறைகிறதா? ஜிஎஸ்டியில் மாற்றம்?

மாதிரி புகைப்படம்

Published: 

02 Jul 2025 16:16 PM

இன்றைய பொருளாதார சூழ்நிலையில், ஒரு குடும்பத்தின் தினசரி செலவுகளே அந்த குடும்பத்தின் வருமானத்தில் (Income) பெரும்பங்கு வகிக்கின்றன. குறிப்பாக எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு, அத்தியாவசிய பொருட்களின் விலையை அடிப்படையாக வைத்து தான், அவர்கள் பிற செலவுகளை திட்டமிட முடியும். இதனால் அந்த பொருட்களின் விலை உயர்ந்தால், மாத பட்ஜெட்டில் பெரும் பாதிப்பு ஏற்படும்.   இந்தப் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி (GST) வைத்துதான் அதன் விலை தீர்மானிக்கப்படும். இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டியை  12 சதிவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைப்பதற்கும் எனவும் அல்லது நீக்குவதற்கும்  மத்திய அரசு (Central Government) பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக நெய், சோப்பு, மற்றும் ஸ்நாக்ஸ் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைக்கப்படலாம் என தவகல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி விகிதத்தில் மாற்றம் எதற்காக?

தற்போது 12% ஜிஎஸ்டி விகிதத்தில் உள்ள பொருட்கள், பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்கள் அடிக்கடி வாங்கும் அல்லது பயன்பாட்டில் அதிகம் இருக்கும் பொருட்களாக இருக்கின்றன. இந்த காரணத்தால், அந்த பொருட்களின் விலை குறைய, அவற்றை 5% ஜிஎஸ்டி விகிதத்துக்குள் கொண்டு வர அல்லது 12% விகிதத்தைவே நீக்கி, அந்த பொருட்களை ஏற்கனவே உள்ள மற்ற (குறைவான அல்லது அதிகமான) ஜிஎஸ்டி விகிதங்களில் சேர்க்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

விலை குறைவால் ஏற்படும் நன்மைகள்

இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், மக்களின் தினசரி செலவுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான வரி குறைந்தால்,மக்கள் பணம் மிச்சமாக்கும் சூழ்நிலை உருவாகும். இது மக்கள் மீதான விலைவாசி அழுத்தங்களை குறைக்கும் ஒரு நல்ல முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. இது குறித்து வரவிருக்கும் 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிக்குள் கூட்டம் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜிஎஸ்டி கவுன்சிலை மத்திய நிதியமைச்சர் தலைமையிலான குழு வழிநடத்துகிறது. அதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த குழுவே ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்களை பரிந்துரை செய்யும் அதிகாரம் கொண்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம், இந்தியாவில் ஜிஎஸ்டி முறை முதல் முறையாக அறிமுகமானது. அந்த நேரத்தில் இருந்து இன்று வரை, ஜிஎஸ்டி விகிதங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டாலும், தற்போது பரிசீலிக்கப்படும் 12% ஜிஎஸ்டி விகித மாற்றம் என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.  ஏனெனில், இந்த விகிதத்தில் இருக்கும் பொருட்களான சோப்பு, நெய், பிஸ்கட் போன்ற மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருட்களாகும். இவற்றை 5% வரி விகிதத்துக்குள் கொண்டு வந்தால், பொருளாதார ரீதியாக எளிய மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.