State Bank Of India: புதிய ‘ஃப்ளெக்ஸி ஹோம் இன்சூரன்ஸ்’ – என்ன ஸ்பெஷல்?
SBI Flexi Home Insurance : ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் புதிய ஃபிளெக்ஸி ஹோம் இன்சூரன்ஸ் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தீ விபத்துகள், இயற்கை பேரழிவு, திருட்டு போன்றவற்றில் இருந்து நம் வீட்டையில் அதில் உள்ள பொருட்களையும் பாதுகாக்கிறது. இந்த இன்சூரன்ஸ் திட்டம் குறித்து இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.

மாதிரி புகைப்படம்
இந்தியாவில் பலருக்கும் சொந்த வீடு என்ற கனவு இருக்கும். பல போராட்டங்களுக்கு பிறகு வீடு கட்டும் நாம் அதனை பாதுகாப்பது மிக அவசியம். நம் வீடு மற்றும் அதில் உள்ள பொருட்களை பாதுகாப்பதற்கு ஹோம் இன்சூரன்ஸ் (Home Insurance) பெரிதும் உதவுகிறது. ஹோம் இன்சூரன்ஸ் என்பது நம் வீட்டையும், அதில் உள்ள பொருட்களையும் பாதுகாப்பதற்காக வழங்கப்படும் பாதுகாப்பு திட்டமாகும். இது தீ விபத்து, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள், திருட்டு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளால் ஏற்படும் இழப்புகளுக்கு எதிராக பாதுகாப்பு வழங்குகிறது. எல்லா வீட்டு உரிமையாளர்களும், குறிப்பாக வீடு வாங்குவதற்காக கடன் (Home Loan) பெற்றவர்கள், ஹோம் லோன் பெறுவது அவசியம். வங்கிகள் (Bank) உள்ளிட்ட பல நிதி நிறுவனங்கள், கடன் வழங்கும் முன் வீட்டு காப்பீட்டை கட்டாயமாக்குகின்றன. மேலும், வாடகை வீட்டில் வசிப்பவர்களும், தங்கள் சொத்துகளை பாதுகாக்க வீட்டு காப்பீட்டை பெறலாம்.
இந்த நிலையில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் (State Bank Of India) ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் தனது புதிய ‘ஃப்ளெக்ஸி ஹோம் இன்சூரன்ஸ்’ (Flexi Home Insurance) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் வீடு மற்றும் அதன் பொருட்களைப் பாதுகாக்கும் வகையில் பிரத்யேக காப்பீடு வழங்குகிறது. இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் அதன் சிறப்பம்சங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்
இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
வாடிக்கையாளர்கள் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப காப்பீடு திட்டத்தை வடிவமைக்க முடியும். அதாவது, தீ விபத்து தவிர, இயற்கை பேரழிவுகள், திருட்டு, விலையுயர்ந்த பொருட்களின் பாதுகாப்பு, ஒருவேளை வீடு சேதமடைந்தால் வெளியே தங்குவதற்கான செலவுகள் போன்றவற்றை இந்த திட்டத்தில் சேர்க்க முடியும்.
- அனைத்து திட்டங்களிலும் கட்டாயமாக தீ விபத்து காப்பீடு இருக்கும்.
- மேலும் பல விருப்ப காப்பீடுகளை தேர்வு செய்தால், அதற்கான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
- ஒரே முறை கட்டணம் செலுத்தி, 20 ஆண்டுகள் வரை காப்பீடு பெற முடியும்.
- இந்த திட்டம் வீடு மற்றும் அதன் பொருட்களை முழுமையாக பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரழிவுகள், திருட்டு போன்றவற்றில் இருந்து நிதி பாதுகாப்பை வழங்குகிறது.
- தங்கள் சொந்த வீடுகளுக்கு இந்த காப்பீடு பெறலாம். வாடகை வீட்டில் வசிப்பவர்களும் தாங்கள் வசிக்கும் வீடுகளில் உள்ள பொருட்களுக்கு காப்பீடு பெற முடியும்.
- வீடு பாதிக்கப்பட்டால் சரியான ஆவணங்களை அளித்து 7 நாட்களில் நாம் இன்சூரன்ஸ் தொகையை பெற முடியும்.
திட்டத்தில் எப்படி இணைவது?
எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் இந்த திட்டத்தை பெறலாம். மேலும், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, கட்டணத்தை செலுத்தி, காப்பீடு பெற முடியும்.
இந்த ‘ஃப்ளெக்ஸி ஹோம் இன்சூரன்ஸ்’ திட்டம், வீடு மற்றும் அதன் பொருட்களை முழுமையாக பாதுகாக்கும் வகையில், வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப காப்பீடு வழங்குகிறது. நீண்டகால நிதி பாதுகாப்பை உறுதி செய்யும் இந்த திட்டம், வீட்டு உரிமையாளர்களுக்கு