பான் கார்டு தொடர்பான முக்கிய மாற்றங்கள்.. ஏப்ரல் 1, 2026 முதல் அமல்! | TV9 Tamil News

பான் கார்டு தொடர்பான முக்கிய மாற்றங்கள்.. ஏப்ரல் 1, 2026 முதல் அமல்!

Updated On: 

22 Feb 2026 21:49 PM

 IST

Aadhaar Card Changes From April 2026 | இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு உள்ள நிலையில், அதில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த மாற்றங்கள் ஏப்ரல் 2026 முதல் அமலுக்கு வர உள்ளன.

1 / 5இந்திய குடிமக்களுக்கான சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பான் கார்டு. பான் கார்டு இல்லை என்றால் பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு விடும். இவ்வாறு மிக முக்கிய ஆவணமாக பான் கார்டு உள்ள நிலையில், அதில் முக்கிய மாற்றம் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய குடிமக்களுக்கான சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றுதான் பான் கார்டு. பான் கார்டு இல்லை என்றால் பண பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டு விடும். இவ்வாறு மிக முக்கிய ஆவணமாக பான் கார்டு உள்ள நிலையில், அதில் முக்கிய மாற்றம் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

2 / 5

மத்திய அரசு வாருமான வரி விதிகள் 2026-ன் வரைவு ஆவணத்தை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு வருமான வரி சட்டம் 2025-ஐ அடிப்படையாக கொண்டு திருத்தம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சாமானிய மக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் பல தரப்பினருக்கும் பெரிய நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

3 / 5

புதிய வரைவு விதிகளின் அடிப்படையில் வங்கி அல்லது கூட்டுறவு வங்கி, தபால் நிலையங்களில் ஒரு நிதியாண்டில் மொத்த பணமாக மேற்கொள்ளப்பட்ட டெபாசிட் அல்லது பணம் எடுத்ததின் அளவு ரூ.10 லட்சம் அல்லது அதற்கும் மேல் இருந்தால் மட்டுமே பேன் குறிப்பிடப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 

4 / 5

தற்போது ஒரு நாளில் ரூ.50,000-க்கு மேல் ரொக்க டெபாசிட் செய்தால் பான் கார்டு கட்டாயமாக உள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் சிறு, குறு வியாபாரிகள் மற்றும் ஊழியர்கள் பயனடைவார்கள். வாகனங்கள் வாங்கும்போது பான் கார்டை குறிப்பிடுவதற்கான வரம்பு மாற்றப்பட்டுள்ளது. ரூ.5 லட்சத்துகு மேல் விலை உள்ள வாகனங்கள் பான் விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும். 

5 / 5

முன்பு இருசக்கர வாகனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், தற்போது இருசக்கர வாகனங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அசையா சொத்து வாங்கும்போதும், விற்பனை செய்யும்போதும் பரிசு அல்லது மேம்பாடு ஒப்பந்தங்களுக்கு பான் குறிப்பிடும் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.