EPFO : இபிஎஃப்ஓவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமா?.. ஆன்லைன் மூலம் சுலபமாக செய்து முடித்துவிடலாம்!
EPFO Name Correction | இபிஎஃப்ஓவில் உள்ள அனைத்து விவரங்களும் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒருவேளை ஏதேனும் தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில், இபிஎஃப் கணக்கை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இந்தியாவில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் பெயரில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) கீழ் கணக்கு தொடங்கப்பட்டு அதில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து 12 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு மாதம் மாதம் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் தங்கள் செலவுக்காக பயன்படுத்திக்கொள்ளவும், கடைசி கால தேவைக்காக முதலீடு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஊழியர்களின் தனிப்பட்ட விவரங்கள் துல்லியமாக இருக்க வேண்டும்
இதுமட்டுமன்றி, ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகம் ஊழியர்களுக்கு மேலும் பல சேவைகளை வழங்கி வருகிறது. ஆனால், இபிஎஃப்ஓவின் சேவைகளை பயன்படுத்த வேண்டும் என்றால் ஊழியர்களின் விவரங்கள் அனைத்தும் மிகவும் சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒருவேளை ஊழியர்களின் தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் இபிஎஃப்ஓ சேவைகளை பயன்படுத்த முடியாமல் போய்விடும். இந்த நிலையில், இபிஎஃப்ஓவில் பெயர் திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இபிஎஃப்ஓவில் பெயர் திருத்தம் செய்வது எப்படி – முழு விவரம் இதோ!
- இபிஎஃப் கணக்கில் பெயர் திருத்தம் செய்ய வேண்டு என்றால் முதலில் இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.epfindia.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் UAN (Universal Account Number), கடவுச்சொல் (Password), கேப்ட்சா (Captcha) உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்து லாக் இன் (Log In) செய்ய வேண்டும்.
- இணையதளத்தில் லாக் இன் செய்த பிறகு, மேனேஜ் டேபை (Manage Tab) கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் உள்ள Modify Basic Details என்பதை கிளிக் செய்து பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்யுங்கள்.
- பிறகு உங்கள் பெயரில் என்ன மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை மேற்கொண்டு விவரங்களை சரிபார்த்துவிட்டு பதிவு செய்யுங்கள்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக இபிஎஃப்ஓவில் பெயர் மாற்றம் செய்துக்கொள்ளலாம். பெயர் மாற்றத்திற்காக விண்ணப்பித்த ஒருசில நாட்களில் பெயர் மாற்றம் செய்யப்படும். இபிஎஃப்ஓவை பொறுத்தவரை ஆதார் கார்டு, பான் கார்டில் உள்ள விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.