Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025 Playoffs: பிளே ஆஃப் கனவுடன் பெங்களூரு, கொல்கத்தா.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா சென்னை..?

CSK's IPL 2025 Elimination: 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பாராத வகையில் 8 தோல்விகளால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இருப்பினும், அவர்களின் மீதமுள்ள போட்டிகள் பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான் போன்ற அணிகளின் பிளே ஆஃப் நம்பிக்கையை பாதிக்கும். இந்த அணிகளுக்கு சென்னை அணி எதிர்கொள்ளும் போட்டிகள் மிகவும் முக்கியமானதாகும். வெற்றி அல்லது தோல்வி அவர்களின் பிளே ஆஃப் பயணத்தை தீர்மானிக்கும்.

IPL 2025 Playoffs: பிளே ஆஃப் கனவுடன் பெங்களூரு, கொல்கத்தா.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா சென்னை..?
சென்னை சூப்பர் சிங்ஸ்Image Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 01 May 2025 18:10 PM

2025 ஐபிஎல் (IPL 2025) சீசனில் எம்.எஸ்.தோனி (MS Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 8 தோல்விகளை சந்தித்து, பிளே ஆஃப் சுற்று தகுதியில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. 2025 ஏப்ரல் 30ம் தேதியான நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்று பிளே ஆஃப் நம்பிக்கைகளை தகர்த்தது. சென்னை அணி போட்டியில் இருந்து வெளியேறினாலும், பிளே ஆஃப் வாய்ப்பை பெற நினைக்கும் மற்ற அணிகளின் வாய்ப்புகளை கெடுக்கும் சக்தியை கைகளில் கொண்டுள்ளது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தவிர்க்க விரும்பும் அணி எது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகின்ற 2025 மே 3ம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது. ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்னும் பிளே ஆஃப் பந்தயத்தில் உள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்ல வேண்டுமென்றால், மீதமுள்ள 4 போட்டிகளில் குறைந்தது 2 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.

இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றி பெங்களூரு அணியின் பிளே ஆஃப் பாதையை வலுப்படுத்தும். அதேநேரத்தில், சென்னை அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தால் அவரக்ளின் பிளே ஆஃப் வேகம் குறைய வாய்ப்புள்ளது. இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

ஐபிஎல் 2025 சீசனில் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. மேலும், ஒரு போட்டி முடிவில்லாமல் போனது. இதன் அடிப்படையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுகளில் தகுதி பெற வேண்டுமென்றால், மீதமுள்ள 4 போட்டிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டும்.

2025 மே 7ம் தேதி ஈடன் கார்டன்ஸில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றாக வேண்டும். அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால், கொல்கத்தாவின் பிளே ஆஃப் கனவு தகர்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் 8வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 10 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ள நிலையில், பிளேஆஃப் பந்தயத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும். இருப்பினும், மற்ற அணிகள் நிலையை சார்ந்திருக்க வேண்டும்.

2025 மே 12ம் தேதி அன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டிதான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முக்கியமான போட்டிகளில் ஒன்று. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டியிலிருந்து வெளியேறும். இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஒவ்வொரு போட்டியும் செய் அல்லது செத்துமடிதான்.

 

வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!
வெயிலால் ஏற்படும் தோல் எரிச்சல்... டாக்டர் சொல்லும் அறிவுரை!...
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!
கோடையில் நீங்கள் சிக்கன் சாப்பிடுகிறீர்களா? பிரச்சனை உண்டாகும்!...
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ
குங்ஃபூவை பயன்படுத்தி திருடனை வீழ்த்திய இளைஞர் - வைரல் வீடியோ...
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!
Amazon Great Summer Sale - டாப் 5 ஏசி பிராண்டுகள்!...
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்
காதலில் விழுந்த ஷிகர் தவான்! பெண் புகைப்படத்துடன் வெளியான அப்டேட்...
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!
இளைஞருக்கு குளிரை சூடாகவும், சூடானவை குளிராகவும் உணரும் நோய்!...
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!
பனீர் டிக்கா மசாலா சாப்பிட ஆசையா..? எளிதாக இப்படி செய்து பாருங்க!...
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்
தியேட்டரில் புகைபிடிக்கும் எச்சரிக்கைகள் மனநிலையைக் கொல்லும்...
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?
யாருடன் கூட்டணி ? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?...
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !
விஜய்யின் பேச்சை கேட்காத ரசிகர்கள் - சேதமடைந்த வாகனம் !...
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் நாயகி இவரா?...