FD Scheme : சிறந்த லாபத்தை தரும் டாப் 7 எஃப்டி திட்டங்கள்.. பட்டியல் இதோ!
High Yield Fixed Deposits | இந்தியாவில் பெரும்பாலான வங்கிகள் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அவற்றில் அதிக லாபம் தரக்கூடிய 5 சிறப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்பு நிதி (Fixed Deposit) திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், சிறந்த பலன்களை பெற முடியும். பாதுகாப்பான பொருளாதாரத்தை கட்டமைக்கும் வகையில், ஏராளமான பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அவ்வாறு சேமிக்க விரும்பும் பொதுமக்களின் தேர்வாக இந்த நிலையான வைப்பு நிதி திட்டம் உள்ளது.
அதிக லாபம் வழங்க கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்கள்
இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. 1 முதல் 10 ஆண்டுகள் வரையிலான கால அளவீடுகளை கொண்ட திட்டங்களை இந்த வங்கிகள் செயல்படுத்துகின்றன. ஒவ்வொரு வங்கியும் தங்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வழங்குகின்றன. இந்த நிலையில், அதிக லாபம் வழங்க கூடிய பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
FD திட்டங்களுக்கு சிறந்த வட்டியை வழங்கும் டாப் 7 வங்கிகள்
பெரும்பாலான வங்கிகள் தங்களின் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு அதிக வட்டியை வழங்குகின்றன. அந்த வகையில், 5 ஆண்டு திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கும் 7 வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹெச்டிஎஃப்சி வங்கி
ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கி (ICICI) வங்கி தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.2 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல இந்த திட்டத்திற்கு மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
பெடரல் வங்கி
பெடரல் வங்கி (Federal Bank) தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.1 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda) தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.8 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், மூத்த குடிமக்களுக்கு 7.4 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (Union Bank of India) தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.5 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.4 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) தனது 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 6.5 சதவீதம் வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.