Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Post Office FD : இரண்டு மடங்கு லாபம் தரும் அசத்தல் சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்ய சிறந்த தேர்வு!

High-Return Post Office FD | இந்தியாவில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் அரசு நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இரண்டு மடங்கு லாபம் தரும் சேமிப்பு திட்டம் குரித்து விரிவாக பார்க்கலாம்.

Post Office FD : இரண்டு மடங்கு லாபம் தரும் அசத்தல் சேமிப்பு திட்டம்.. முதலீடு செய்ய சிறந்த தேர்வு!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 21 Mar 2025 14:51 PM

தனிநபர் பொருளாதாரம் (Personal Economy) என்பது மிகவும் முக்கியாமான ஒன்றாகும். நிலையான பொருளாதாரம் இல்லை என்றால், எதிர்பாராத சூழலில் ஏற்படும் நிதி சிக்கல்களை சந்திக்க முடியாத சூழல் ஏற்படும். எனவே தான், எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டு என்று பொதுமக்களை பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

அதிக லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்

பொதுமக்கள் சேமிப்பதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வகையான சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக சேமிப்பு திட்டம் (Post Office Saving Scheme). இந்த திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுத்தப்படுவதால், மிகவும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, ஏராளமான பொதுமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், இரு மடங்கு லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு மடங்கு லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்

அஞ்சலகங்கள் மூலம் அரசு எஃப்டி (FD – Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 1 முதல் 5 ஆண்டுகள் கால அளவீடுகளுடன் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டத்தில் கால அளவீட்டிற்கு ஏற்ப வட்டி விகிதம் வழங்கப்படும். இத்தகைய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும். இந்த நிலையில், இரண்டு மடங்கு லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து பார்க்கலாம்.

5 ஆண்டுகளுக்கான அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டத்தில் நீங்கள் ரூ.10 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 5 ஆண்டுகளில் வட்டியாக மொத்த ரூ.4,49,949 கிடைக்கும். அதன்படி திட்டத்தின் முடிவில் மொத்தமாக ரூ.14,49,949 கிடைக்கும். இந்த தொகையை மேலும் ஒரு ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் பட்சத்தில் வட்டியாக மொத்தம் ரூ.11,02,349 கிடைக்கும்.

அதன்படி, 10 ஆண்டுகள் முதலீடு செய்வதன் மூலம் வட்டி மற்றும் முதலீடு ஆகியவை சேர்த்து மொத்தமாக ரூ.21,02,349 கிடைக்கும். எனவே அஞ்சலகத்தில் இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தில் வெறும் ரூ.10 லட்சம் முதலீடு செய்வதன் மூலம் வட்டியாக மட்டும் ரூ.11,02,349 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?...
மே தின விடுமுறை.. இன்று இங்கெல்லாம் போகாதீங்க.. முழு லிஸ்ட் இதோ!
மே தின விடுமுறை.. இன்று இங்கெல்லாம் போகாதீங்க.. முழு லிஸ்ட் இதோ!...
நானி நடித்துள்ள 'ஹிட் 3' படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!
நானி நடித்துள்ள 'ஹிட் 3' படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம் இதோ!...
மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. பால் விலை அதிரடி உயர்வு!
மாதத்தின் முதல் நாளே அதிர்ச்சி.. பால் விலை அதிரடி உயர்வு!...
விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே அப்படித்தான்- நடிகை திரிஷா
விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே அப்படித்தான்- நடிகை திரிஷா...
நான் எதுவாக இருந்தாலும் ஓபனாக கூறிவிடுவேன்.. நடிகர் அஜித் குமார்!
நான் எதுவாக இருந்தாலும் ஓபனாக கூறிவிடுவேன்.. நடிகர் அஜித் குமார்!...
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...