மூத்த குடிமக்களுக்கு இதுதான் பெஸ்ட்.. FD திட்டங்களுக்கு 9% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
High Yield Fixed Deposit Scheme | இந்தியாவில் உள்ள பல முன்னணி வங்கிகள் பல வகையான நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான எஃப்டி திட்டங்களுக்கு 9 சதவீதம் வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொருளாதாரம் (Economy) என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். பொருளாதாரம் இல்லை என்றால் அத்தியாவசிய தேவைகளை கூட செய்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்படும். பொருளாதாரம் தற்காலிகமானதாக மட்டுமல்லாமல் நிலையானதாக இருக்க வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். காரணம், நிலையான பொருளாதாரம் (Stable Economy) இல்லை என்றால் எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிப்பது மிகவும் கடினமாக மாறிவிடும்.
மூத்த குடிமக்களுக்கு சிறந்த பலன்களை வழங்கும் FD திட்டங்கள்
மாறிவரும் பொருளாதாரம், பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை, நிலையற்ற வேலை உள்ளிட்ட காரணங்கள் காரணமாக எப்போது வேண்டுமானாலும் நிதி சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அவற்றுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் ஆகிறது. சாதாரன பொதுமக்களுக்கே இந்த நிலை என்றால், மூத்த குடிமக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கும். அதனால் தான் மூத்த குடிமக்களுக்கான சில திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD (Fixed Deposit) எனப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். ஆனால், மூத்த குடிமக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு சிறப்பு சலுகைகளுடன் அதிக வட்டியும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 9% வரை வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான FD – 9% வரை வட்டி வழங்கும வங்கிகள்
வ.எண் | வங்கி | வட்டி விகிதம் | கால அளவு |
1 | ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 9 சதவீதம் வட்டி | 888 நாட்கள் |
2 | உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி | 8.75 சதவீதம் வட்டி | 12 மாதங்கள் |
3 | எச்டிஎஃப்சி வங்கி | 7.90 சதவீதம் வட்டி | 55 மாதங்கள் |
4 | இந்தியன் வங்கி | 7.80 சதவீதம் வட்டி | 400 நாட்கள் |
5 | கனரா வங்கி | 7.90 சதவீதம் வட்டி | 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் |
6 | பேங்க் ஆஃப் இந்தியா | 7.80 சதவீதம் வட்டி | 400 நாட்கள் |
7 | யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா | 7.55 சதவீதம் வட்டி | 456 நாட்கள் |
8 | இந்தியன் ஓவர்சீஸ் வங்கி | 7.80 சதவீதம் வட்டி | 444 நாட்கள் |
9 | பேங்க் ஆஃப் பரோடா | 7.65 சதவீதம் வட்டி | 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் |
10 | இந்தியன் ஸ்டேட் வங்க் | 7.50 சதவீதம் வட்டி | 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் |
மேற்குறிப்பிட்ட இந்த வங்கிகளின் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், மூத்த குடிமக்கள் நல்ல லாபத்தை பெற முடியும். இந்தியாவை பொருத்தவரை 60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகிறது. இந்த சூழலில் அவர்களால் வருமானம் ஈட்ட முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஓய்வுக்கு பிந்தைய அவர்களது எதிர்காலம் நிதி பாதுகாப்பு கொண்டதாக இருக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.