பொக்கிஷமான தருணம்… வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
Actress Shalini Ajith: மத்திய அரசு அஜித் குமாருக்கு சமீபத்தில் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்த அவரது மனைவி ஷாலினி அஜித் குமார் ரசிகர்களுக்கு ஒரு பொக்கிஷமான தருணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்ட் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் குமார் எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் இல்லை. அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதேனும் மக்களுக்கு தெரிய வேண்டும் என்றால் அஜித்தின் பெயரில் அவரது மேனேஜர் சுரேஷ் சந்திராவின் எக்ஸ் தள பக்கத்தில் தான் தெரிவிக்கப்படும். அஜித் குமாரின் படங்களின் அப்டேட் முதல் அவரது வாழ்க்கை சார்ந்த அறிவிப்புகள் அனைத்தும் சுரேஷ் சந்திராவின் சமூக வலைதளப் பக்கத்தில் தான் தெரிவிக்கப்படும். இந்த நிலையில் நடிகை ஷாலினி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு அஜித்தின் பிரத்தியேகமான சில புகைப்படங்களை தொடர்ந்து ஷாலினி அஜித் வெளியிட்டு வருகிறார். மேலும் அவரது குழந்தைகளின் புகைப்படங்களையும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவார்.
இந்திய சினிமாவிற்கு, குறிப்பாக தமிழ் சினிமாவிற்கு நடிகர் அஜித் குமார் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக, ஏப்ரல் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகர் அஜித் குமார் மற்றும் அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அனௌஷ்கா மற்றும் ஆத்விக் உட்பட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
தற்போது நடிகை ஷாலினி அஜித் குமார் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனுக்கு சமீபத்தில் சென்றபோது எடுக்கப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அஜித் மற்றும் ஷாலினியின் மகன் ஆத்விக்கை கன்னத்தில் தட்டிக் கொடுப்பது போன்று இருந்தது.
நடிகை ஷாலினி வெளியிட்ட இன்ஸ்டா பதிவு:
View this post on Instagram
அந்தப் படத்தில், அவர்களின் மகன் ஆத்விக்கை ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆத்விக் அஜித்தை அன்புடன் கன்னத்தில் தட்டிக்கொடுக்கும் அழகான காட்சி அமைந்துள்ளது. அந்த பத்ம பூஷன் விழா முடிந்த பிறகு மண்டபத்திலிருந்து வெளியேறும்போது திரௌபதி அவரது கன்னங்களைத் தட்டிச் செல்வார்.
அவருக்கு அருகில் அஜித் மற்றும் ஷாலினியின் மகள் அனௌஷ்கா நின்று, பெருமையுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் நடிகை ஷாலினி ஒரு பொக்கிஷமான தருணம் என்று எழுதி புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். இது தற்போது ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் இன்று நடிகர் அஜித் குமார் இன்று காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விருது வழங்கும் விழா முடிந்த பிறகு சென்னை வந்தடைந்த அஜித் குமாரை ரசிகர்கள் சூழ்ந்தனர். அந்த கூட்டத்தில் சிக்கிய அஜித்தின் காலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.