Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி

Smart Finance Tips : ரூ.1 கோடி சேமிக்க வேண்டும் என்ற இலக்கை கொண்டிருக்கிறீர்களா? உங்கள் மாத வருமானத்தில் அந்த இலக்கை எளிதாக அடையலாம். அதற்கு சேமிப்பு, முதலீடுகள் என சரியான திட்டமிடல் மிகவும் அவசியம். உதாரணமாக ரூ.1 லட்சம் மாத வருமானத்தில் ரூ. 1 கோடி சேமிப்பது எப்படி என இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்களா? ரூ.1 கோடி சேமிக்க ஈஸியான வழி
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 29 Apr 2025 21:18 PM

பலருக்கும் ரூ.1 கோடி சேமிக்க (Savings) வேண்டும் என்ற இலக்கு அசாத்தியமான ஒன்றாக தோன்றலாம். ஆனால் இது சாதாரண வருமானம் (Income) கொண்டவர்களாலும் அந்த இலக்கை அடைய முடியும் என்பது நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். குறிப்பாக மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏற்கனவே அந்த இலக்கின் பாதியை எட்டிவிட்டீர்கள் என்று அர்த்தம்.  சிறந்த திட்டமிடல், நிதி ஒழுங்கு மற்றும் முதலீடு (Investment) குறித்த அறிவு இருந்தால், இந்தக் கனவை நிஜமாக்கலாம். நம் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்காமல், சிறு மாற்றங்கள் மூலம் கூட நம்மை நிதி சுதந்திரத்தை நோக்கி அழைத்துச் செல்ல முடியும். என்டிடிவி பிராஃபிட் இணையதளத்தில் வெளியான கட்டுரையின் படி, நீங்கள் எப்படி திட்டமிட்டு முதலீடு செய்து, உங்கள் ரூ.1 கோடி இலக்கை அடையலாம் என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

ரூ. 1 கோடி இலக்கை அடைவது எப்படி?

நீங்கள் ரூ. 1 லட்சம் சம்பாதிக்கிறீர்கள் என்றால் உங்கள் செலவுகளை சரியாக திட்டமிடுவதன் மூலம் இதனை அடையலாம். வீட்டு வாடகை, மின் கட்டணம், உணவு, போக்குவரத்து, மளிகை செலவுகள் போன்றவற்றுக்கு எவ்வளவு செலவிட வேண்டும் என்பதை நிர்ணயிக்க வேண்டும். பிறகு சேமிப்புகள் மற்றும் முதலீடுகள் குறித்து திட்டமிட வேண்டும். மேலும் பிற செலவுகளான பொழுதுபோக்கு, உணவக செலவுகள், வரவிருக்கும் சுகாதார தேவைகள் ஆகியவற்றுக்கு மாதம் எவ்வளவு செலவிடுவது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.  மாத வருமானத்தில் 30 சதவிகிதத்தை சேமிப்புக்காக ஒதுக்க வேண்டும். உதாரணமாக உங்களுக்கு ரூ. 1 லட்சம் சம்பளம் என்றால், 30, 000 ரூபாயை சேமியுங்கள். விரைவில் இலக்கை அடைய விரும்பினால் மாதம் ரூ. 40, 000 முதல் ரூ. 50000 வரை சேமியுங்கள்.

வங்கி சேமிப்புகளில் மட்டுமே பணத்தை வைக்காமல், வளர்ச்சி அதிகமுள்ள முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யுங்கள். இக்குவிட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (equity mutual funds) வருடத்திற்கு 12 சதவிதம் முதல் 15 சதவிகிதம் வரை வருமானம் தரக்கூடும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம். சற்று அபாயம் அதிகம் எனினும் நல்ல வருமானம் கிடைக்கும். பிபிஎஃப், என்பிஎஸ் போன்ற பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்யலாம். இவை 7 முதல் 8 சதவிகிதம் வருமானம் அளிக்கும். வரி விலக்கும் உண்டு.  ரூ.30,000 மாதம் முதலீடு செய்தால், காம்பவுண்ட் இன்ட்ரஸ்ட் மூலம் பணம் விரைவில் வளரத் தொடங்கும்.

அவசர தேவைகளுக்காக மாத செலவுகளைக் குறைத்து சேமிக்கலாம்

உங்கள் பழக்கங்களை கவனித்து, தேவையற்ற செலவுகளை குறைக்கலாம். உணவகங்கள், சினிமா, பிக்னிக் போன்றவற்றில் கட்டுப்பாடு விதித்துக் கொள்ளுங்கள். வருடத்தில் ஒரு முறை மட்டும் சுற்றுலா போன்றவற்றிற்கு திட்டமிடுங்கள். தற்காலிக தேவைகளுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்வதை தவிர்க்கவும்.  உங்கள் மாத செலவுகளுக்கான 3 முதல் 6 மாத வரையிலான பணத்தை எமர்ஜென்சி ஃபண்டாக சேமியுங்கள். வேலை இழப்பு அல்லது மருத்துவ அவசரங்களை எதிர்கொள்ள இது மிகவும் அவசியம்.

எவ்வளவு காலத்தில் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியும்?

உதாரணமாக மாதம் ரூ.40, 000 முதலீடு செய்து ஆண்டுக்கு 12 சதவிகிதம் வருமானம் கிடைக்கும் என்றால்  முதல் ஆண்டு உங்களுக்கு ரூ.5.76 லட்சம் கிடைக்கும். 5வது ஆண்டில் ரூ. 34. 24 லட்சம் கிடைக்கும். 10வது ஆண்டில் ரூ. 87.92 லட்சம் கிடைக்கும். 13வது  ஆண்டில் உங்கள் இலக்கான ரூ. 1 கோடியை அடைவீர்கள்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...