eAadhaar : இ ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

e Aadhaar Download | இந்தியாவில் ஆதார் கார்டு மிகவும் முக்கியமான அடையாள அட்டைகளில் ஒன்றாக உள்ள நிலையில், அதனை எப்போதும் உடன் வைத்திருப்பது அவசியம். ஒருவேளை உங்களிடம் ஆதார் கார்டு இல்லை என்றால் UIDAI-ன் இணையதள மூலம் மிகவும் சுலபமாக இ ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

eAadhaar : இ ஆதார் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

21 Mar 2025 08:41 AM

இந்தியாவில் முக்கிய அடையாள அட்டையாக ஆதார் (Aadhaar) உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களும் ஆதார் கார்டு வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அதார் கார்டு இந்திய குடிமக்களின் பிரதான அடையாள அட்டையாக உள்ளது. ஒரு குழந்தையை பள்ளியில் சேர்ப்பது முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது வரை பல இடங்களில் ஆதார் கட்டாயமாக உள்ளது. இதன் காரணமாகவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஆதார் கார்டு கட்டாயமாக உள்ளது.

ஆதார் கார்டு இல்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள்

இந்த நிலையில், ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் பெரிய சிக்கல் ஆகிவிடும். எனவே அந்த சிக்கல்களை தவிர்க்கும் வகையில் தான், இ ஆதார் கார்டு (e Aadhaar Card) பதிவிறக்கம் செய்துக்கொள்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. உங்களது ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் அவசர தேவைகளுக்காக நீங்கள் இந்த இ ஆதார் கார்டை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், இணையதளம் மூலம் இ ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இ ஆதார் கார்டை பதிவிறக்கம் இணையதளம் மூலம் செய்வது எப்படி

  1. இதற்கு முதலில் UIDAI (Unique Identification Authority of India)-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அங்கு நீங்கள் எந்த மொழியில் இணைய தளத்தை பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பிறகு உள்ளே நுழைந்ததும் மை ஆதார் (My Aadhaar) என்பதை கிளிக் செய்து அதற்கு கீழ் வரும் ஆதார் பதிவிறக்க விருப்பத்தை (Download Aadhaar) கிளிக் செய்ய வேண்டும்.
  4. இதற்கு பிறகு உங்களது முழு பெயர், ஆதார் எண், முகவரி உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும்.
  5. நீங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்யும்போது உங்கள் ஆதார் எண் எந்த அளவுக்கு தெரிய வேண்டும் என்பதை தேர்வு செய்துக்கொள்ளலாம். சிலர் பாதுகாப்பு காரணங்கள் காரணமாக முதல் ஒருசில எண்கள் மட்டும் தெரியும் மாஸ்க் ஆதார் கார்டை (Mask Aadhaar Card) பதிவிறக்கம் செய்வர்.
  6. உங்களுக்கு முழு ஆதார் கார்டு வேண்டுமா அல்லது மாஸ்க் ஆதார் கார்டு வேண்டுமா என்பதை தெளிவு படுத்திக்கொண்டு அதற்கான ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.
  7. இதற்கு பிறகு நீங்கள் பதிவு செய்த உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP (One Time Password) வரும், அதனை பதிவிட்டு சுலபமாக இ ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக ஆன்லைன் மூலம் இ ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.