சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவி.. விசா கட்டுப்பாடுகள்.. அமெரிக்கா அதிரடி!

America Visa Restrictions : சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள இந்திய பயண முகவர்களுக்கு விசா வழங்குவதை தடுக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவும் இந்திய பயண முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, விசாவும் ரத்து செய்யப்படும் என வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவி.. விசா கட்டுப்பாடுகள்.. அமெரிக்கா அதிரடி!

அமெரிக்கா விசா

Updated On: 

20 May 2025 09:41 AM

அமெரிக்கா, மே 20 : சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபட்டுள்ள இந்திய பயண முகவர்களுக்கு விசா வழங்குவதை தடுக்க அமெரிக்கா (US Visa) நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது, சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பயண நிறுவன அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார். குறிப்பாக,   சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  முதலில், டிரம்ப் அமெரிக்காவில் வசிக்கும் சட்டவிரோத குடிமக்களை அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பினார். இதனுடன், பல விதிகளும் மாற்றப்பட்டன.

சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவி

அண்மையில் கூட, அமெரிக்காவில் அனுமதிக்கப்பட்ட காலத்துக்கு பிறகு தங்கினால் நிரந்தர தடை விதிக்கப்படும் என இந்தியர்களுக்கு அமெரிக்க தூதரகம் கடுமையான எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த நிலையில், தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் சட்டவிரோத குடியேற்றத்தை ஊக்குவிக்கும் பயண நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனுடன், சமீப காலங்களில், இதுபோன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்கள் பலரின் விசாக்கள் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் எதிர்காலத்தில், இதுபோன்ற இன்னும் பலரின் விசாக்கள் தடை செய்யப்படும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளிளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டவிரோத குடியேற்றத்திற்கு உதவும் இந்திய பயண ஏற்பாடு நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், மூத்த அதிகாரிகளுக்கு விசா கட்டுப்பாடுகளை அமெரிக்க விதித்துள்ளது.

அமெரிக்கா எச்சரிக்கை

இந்திய பயண ஏற்பாடு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தின் ஆபத்துகள் குறித்து வெளிநாட்டிற்கு தெரியப்படுத்த வேண்டும்.  சட்டவிரோத குடியேற்றத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதே எங்களது நோக்கம். இந்த விசா கட்டுப்பாட்டுக் கொள்கை உலக முழுவதும் அமல்படுத்தப்படுகிறது” என குறிப்பிட்டு இருக்கிறது.

அமெரிக்க குடிமக்களின் பாதுகாப்பே எங்கள் முன்னுரிமை என்றும், இதில் எந்த சமரசமும் செய்யப்படாது என்றும் வெளியுறவுத் துறை தெளிவாகக் கூறியது. சட்டவிரோத தொழிலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது வரும் காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இவை அனைத்தும் டிரம்ப் அரசின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆகும். அமெரிக்கா தொடர்ந்து சட்டவிரோத குடியேறிகளை இந்தியா உட்பட அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தி வருகிறது. 2025 பிப்ரவரி மாதம், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் கூறியிருப்பதாவது, 2009 முதல் 15,756 பேர் சட்டவிரோதமாக குடியேறியதில் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். இதில், 2019ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 2,042 பேர் சட்டவிரோதமாக அமெரிக்கா குடியேறி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.