டிரம்ப் மீது காட்டமான விமர்சனம்.. வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்.. முடிந்ததா பிரச்னை?

Donald Trump - Elon Musk : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீது காட்டமாக விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், தான் அதிகமாக விமர்சித்து இருப்பதாகவும் தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

டிரம்ப் மீது காட்டமான விமர்சனம்.. வருத்தம் தெரிவித்த எலான் மஸ்க்.. முடிந்ததா பிரச்னை?

எலான் மஸ்க் - டொனால்டு டிரம்ப்

Updated On: 

11 Jun 2025 13:34 PM

அமெரிக்கா, ஜூன் 11 : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் (us president donald trump) மீது காட்டமாக விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையில், அதற்கு உலக பணக்காரரான எலான் மஸ்க் (elon musk) தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், “கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அதிகமாக விமர்சித்து விட்டேன்” என்று பதிவிட்டிருக்கிறார். அமெரிக்கா அதிபராக டொனால்டு பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தலில் டிரம்பிற்கு பொருளதார ரீதியாகவும், பிரச்சாரத்திலும் பக்க பலமாக எலான் மஸ்க் இருந்தார். இதனை அடுத்து, டிரம்ப் Doge துறையில் தலைமை ஆலோசகராக எலான் மஸ்க்கை நியமித்தார். இவரது ஆலோசனையில் பல்வேறு முக்கிய முடிவுகளை டொனால்டு டிரம்ப் எடுத்தார்.

டிரம்ப் மீது காட்டமான விமர்சனம்

இதற்கிடையில், கடந்த வாரம் அப்பதிவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பை வெளியிட்டார். இதற்கு முக்கிய காரணம், டிரம்ப் கொண்டு வந்த செலவின மசோதா. இந்த மசோதாவுக்கு ஆரம்பத்தில் இருந்தே எலான் மஸ்க் தெரிவித்தார்.

ஆனால், அதையும் மீறி டிரம்ப் நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை நிறைவேற்றினார். இதனால், இருவருக்கு கருத்து மோதல் நிலவியது. இதனால்,  ஒருவரைக்கொருவர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, டிரம்ப் கொண்டு வந்த மசோதா அருவருப்பானது என எலான் மஸ்க் கூறினார்.

மேலும், டொனால்ட் டிரம்ப் எப்ஸ்டீன் பட்டியலுடன் தொடர்புடையவர் என்று மஸ்க் குற்றம் சாட்டினார், இது தொடர்பான கோப்புகளை பொது வெளியில் வெளியிடாததற்கு இதுவே காரணம் என பகீரங்களாக குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், டிரம்ப் பதவி விலக வேண்டும் எனவும் அமெரிக்க அதிபராக ஜே.டி.வான்ஸ் பொறுப்பேற்க வேண்டும்

வருத்தம் தெரிவித்த மஸ்க்

 

அதோடு, நான் இல்லாமல் டிரம்ப்பால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது. நன்றி மறந்தவர் டிரம்ப் என காட்டமாக எலான் மஸ்க் விமர்சித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பேசிய டொனால்டு டிரம்ப், “இது பழைய செய்தி. எப்ஸ்டீனின் வழக்கறிஞர் கூட எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சொல்லி இருக்கிறார்” என தெரிவித்தார்.

இதனால், இருவருக்கும் கடும் மோதல் நிலவியது. இந்த விவகாரம்  அமெரிக்காவில் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த நிலையில்,  டொனால்டு டிரம்ப் குறித்து விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன் என எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், இவருக்கும் இடையேயான பிரச்னை முடிவுகள் வருவதாக தெரிகிறது.