Pope Leo : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார் போப் 14ஆம் லியோ!

Pope Leo sworn | கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நல குறைவால் காலமானார். அவரை அடுத்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட 14 ஆம் லியோ புதிய போப்பாக வத்திகானில் இன்று (மே 19, 2025) பதவியேற்றார்.

Pope Leo : கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக பதவியேற்றார் போப் 14ஆம் லியோ!

போப் லியோ பதவியேற்பு

Published: 

18 May 2025 23:47 PM

வத்திக்கான், மே 18 : கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் புதிய தலைவராக 14 ஆம் லியோ பதவியேற்றுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக இருந்து வந்த போப் பிரான்சிஸ் உடல்நல குறைவால் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று ( மே 18, 2025) அவர் புதிய போப்பாக பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், 14 ஆம் லியோ பதவியேற்பு குறித்து விரிவாக பார்க்கலாம்.

உடல்நல குறைவால் உயிரிழந்த போப் பிரான்சிஸ்

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு தலைவராக உள்ளவர் தான் போப். போப் வத்திகானில் (Vatican) இருந்து கத்தோலிக்க  கிறிஸ்தவர்களின் தலைவராக செயல்படுவார். அந்த வகையில் கத்தோலிக்க திருச்சபையின் 266வது தலைவராக இருந்து வந்தவர் தான் போப் பிரான்சிஸ். இவர் பல மாதங்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வீடு திரும்பினார். இந்த நிலையில், அவர் ஏபர்ல் 21, 2025 அன்று உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது மறைவு உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், உலகம் முழுவதிலும் இருந்து போப் ஆண்டவர்கள் வருகை தந்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

267வது போப்பாக பதவியேற்றார் 14ஆம் லியோ

போப் பிரான்சிஸ் உயிரிழந்த நிலையில், அடுத்த போப் யாரென எதிர்ப்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில், வத்திகானில் நடைபெற்ற ரகசிய வக்கெடுப்பில் 14 ஆம் லியோ புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இன்று அவர் கத்தோலிக்க திருச்சபையின் 267வது போப்பாக பதவியேற்றுள்ளார். இதன் மூலம் இன்று முதல் அவர் கத்தோலிக்க திருச்சபையின் அதிகாரப்பூர்வ தலைவராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.