குலுங்கிய கட்டிடங்கள்.. பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்.. என்ன நடந்தது?

papua new guinea earthquake : பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 2025 மே 20ஆம் தேதியான நேற்று நள்ளிரவில் 6.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 53 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

குலுங்கிய கட்டிடங்கள்.. பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்.. என்ன நடந்தது?

நிலநடுக்கம்

Updated On: 

21 May 2025 09:08 AM

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் (Papua New Guinea earthquake) ஏற்பட்டுள்ளது. 2025 மே 20ஆம் தேதியான நேற்று நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 53 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின்போது ஏதேனும் பாதிப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. உலக நாடுகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுகிறது.  இதனால், ஆண்டுதோறும் ஆயிரணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். அண்மையில் கூட,  மியான்மர், தாய்லாந்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கம் இருநாடுகளும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

அதோடு,  இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இது உலக நாடுகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, பெரியளவில் நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை.  இந்த நிலையில், தற்போது பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.4 ரிகடர் அளவுகோலில்  ஏற்பட்டுள்ளது. இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.   மேலும்,  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும்,  லேசாக கட்டிடங்கள் குலுங்கியதாக மட்டும் தகவல் வெளியாகி உள்ளது.

நடந்தது என்ன?

எனவே, சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. அடிக்கடி  பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.  ஆனால், பெரியதாக எதுவும் சேதம் இதுவரை ஏற்பட்டதில்லை. அந்த வகையில் தான், 2025 மே 20ஆம் தேதியான நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்திலும் எந்த பாதிப்பும்  ஏற்படவில்லை.

முன்னதாக, 2025 மே 20ஆம் தேதியான நேற்றும் நேபாளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4.7 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. காத்மாண்டுவிலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் உள்ள சினுவா பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

தனஹு, பர்வத் மற்றும் பாக்லுங் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. முன்னதாக மே 14 அன்று, கிழக்கு நேபாளத்தின் சோலுகும்பு மாவட்டத்தில் உள்ள செஸ்கம் பகுதியில் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.