Viral Video : சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண்.. இணையத்தை ஆர்ச்சர்யத்தில் ஆழ்த்திய வீடியோ!
Woman Plays With Leopard Amazed Internet | பொதுவாக சிங்கம், புலி, சிறுத்தை போன்ற விலங்குகளை கண்டால் மனிதர்கள் தலை தெறிக்க ஓடிவிடுவார்கள். ஆனால் இளம் பெண் ஒருவர் சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடுகிறார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

வைரல் வீடியோ
பொதுவாக சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வலிமையான விலங்குகளை கண்டால் மனிதர்கள் பயத்தில் உறைந்துவிடுவார்கள். காரணம், இந்த விலங்குகள் மிகவும் ஆக்ரோஷமானவை. அவற்றின் கோபத்திற்கு ஆளாக நேர்ந்தால் உயிரே போய்விடும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக சிங்கம், புலி உள்ளிட்ட விலங்குகளை கண்டால் மனிதரகளுக்கு தங்களை அறியாமலே பய உணர்வு வந்துவிடும். ஆனால், இளம் பெண் ஒருவர் சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடிய பெண்
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் மரத்திற்கு அடியிம் அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்கு அருகே சிறுத்தை ஒன்று செல்கிறது. அதனை கண்டு அந்த இளம் பெண் பயப்படாமல் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அந்த சிறுத்தை இளம் பெண்ணை நெருங்கி சென்றதும் அவர் அதனை செல்லமாக கொஞ்சுகிறார். அந்த சிறுத்தையும் அந்த பெண்ணின் அரவணைப்பை விரும்பும் விதமாக கண்களை மூடிக்கொண்டு பெண்ணின் மீது பாசமாக உரசுகிறது.
அந்த பெண்ணிடம் சிறுத்தை மிகவும் பாசமாக நடந்துக்கொள்ளும் நிலையில், அவர் சிறுத்தைக்கு முத்தமும் கொடுக்கிறார். ஆனால், சிறுத்தையோ ஒரு சிறிய பூனை குட்டியை போல மிகவும் அமைதியாகவும், அன்பாகவும் அந்த பெண்ணிடம் நடந்துக்கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே வைரலாகி வருகிறது. அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இணையத்தில் வைரலாகும் வீடியோ
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அதனை பார்க்கும் நெட்டிசன்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்ப்பதற்கு ஆச்சர்யமாகவும், அதே சமயம் அழகாகவும் உள்ளதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். மிகவும் ஆக்ரோஷமான சிறுத்தையை அந்த பெண் ஒரு பூனை குட்டியை போல மாற்றிவிட்டாரே என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இணையத்தில் உலா வரும் மிக அழகிய வீடியோ என்றால் அது இதுதான் என்று வேறு ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.