Viral Video : குழந்தையாக மாறிய புலி.. இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் வீடியோ!

Tiger Playing With Human : இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு காட்டுப் புலி மனிதனுடன் குழந்தை போல விளையாடுவது காட்டப்பட்டுள்ளது. பொதுவாக பயங்கரமானதாகக் கருதப்படும் புலி, அமைதியாகவும் அன்புடன் பழகுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ 2.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. தற்போது இந்த வீடியோவானாது இணையத்தில் பயனர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது.

Viral Video : குழந்தையாக மாறிய புலி.. இணையத்தில் கவனத்தை ஈர்க்கும் வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

05 May 2025 21:45 PM

இணையதளங்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள் (Animals and pets) தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. செல்லப்பிராணிகள் செய்யும் சேட்டைகள் மற்றும் உரிமையாளரிடம்  (owners) நடந்துகொள்ளும் விதம் எனப் பல வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த விதத்தில் காட்டுப் புலி (Wild tiger)  ஒன்று நபர் ஒருவரிடம் குழந்தையைப் போல, தரையில் படுத்துக்கொண்டு விளையாடும் வீடியோவானது பலரையும் கவர்ந்து வருகிறது. அந்த பிரம்மாண்ட புலியானது தரையில் படுத்துக்கொண்டு, அந்த நபர் வயிற்றில் தடவிக் கொடுக்கிறார். அந்த பெரிய புலியானது எந்தவித எதிர்ப்பும் இல்லாமல், மற்ற புலியைப் போல இல்லாமல் தரையில் படுத்துக்கொண்டு இருக்கிறது.

காடுகளில் சிங்கத்தைத் தொடர்ந்து, பயங்கரமாக இருக்கும் விலங்குகளின் பட்டியலில் இருப்பது புலிதான். இவையும் பூனை வகையைச் சார்ந்த உயிரினம்தான். இந்த விலங்கானது பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும் மிகவும் பயங்கரமானவை. புலிகளும் வேட்டையாடி உண்ணும் விலங்குகளில் ஒன்றுதான். இப்படிப்பட்ட பெரிய விலங்கானது குழந்தையைப் போல், நபர் ஒருவரிடம் தரையில் படுத்துக்கொண்டு அமைதியாகக் கொஞ்சி விளையாடுவது போல இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

இணையத்தில் மக்களைக் கவரும் புலியின் வீடியோ :

இந்த வீடியோவானது இணையத்தில் பயனர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை Nature is Amazing என்ற எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். சாதாரணமாகப் புலியானது காட்டிலே சிங்கத்தை விடமும் பலசாலி என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட புலி ஒன்று நபர் ஒருவரின் வருடலுக்கு எந்தவித எதிர்வினைகளும் இல்லாமல், அமைதியாகப் படுத்துக் கொஞ்சி விளையாடும் வீடியோ பலரையும் கவர்ந்து வருகிறது.

இந்த வீடியோவை இதுவரை சுமார் 2.3.மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. மேலும் பல பயனர்கள் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். ஒரு புலியனாது எவ்வாறு அமைதியாக இருக்கிறது என்று பாருங்கள் என்றும் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதில் சில கருத்துக்களைப் பற்றிப் பார்க்கலாம்.

வீடியோவின் கீழ் எக்ஸ் பயனர்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் முதளில் பயனர் ஒருவர் “இந்த பெரிய புலியை பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருக்கிறது, ஆனால் அது நடந்துகொள்ளும் விதமானது சிறு குழந்தையைப் போல் இருக்கிறதே” என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இது காட்டின் கொடிய விலங்கு அல்ல, இது மிகவும் அழகான, க்யூட்டான செல்லப்பிராணி என்று கூறியிருக்கிறார்.