Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Viral Video : பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோவை பாருங்கள்!

Crane optical illusion : ஒரு கொக்கு வேகமாக ஓடும் நீரில் நடப்பது போன்ற வைரல் வீடியோ இணையத்தை கவர்ந்துள்ளது. உண்மையில், நீரின் வேகம்தான் அந்த மாயையை உருவாக்குகிறது. கொக்கின் இயக்கம் மெதுவாக இருந்தாலும், நீரோட்டத்தின் வேகம் அதை வேகமாக நடப்பது போன்று காட்டுகிறது. இது ஆப்டிகல் இல்லுஷன் எனப்படும் ஒரு இயற்பியல் நிகழ்வு. மில்லியன் கணக்கானோர் இந்த வீடியோவைப் பார்த்து குழப்பமடைந்துள்ளனர்.

Viral Video : பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோவை பாருங்கள்!
வைரல் வீடியோ
barath-murugan
Barath Murugan | Published: 04 May 2025 22:39 PM

உலகத்தில் நாம் யோசிக்கமுடியாத அளவிற்கு பல்வேறு அதிசயங்களும், ஆச்சரியங்களும் நடந்து வருகிறது. மனிதர்களின் யோசனைக்கு அப்பாற்பட்ட இந்த விஷயங்களானது சிலநேரத்தில் நம்மையே குழப்பிவிடுகின்றனர். அந்த வகையில் இணையத்தில் மில்லியன் கணக்கில் மக்களைக் குழப்பிய (Confused millions of people)  வீடியோ ஒன்று வைரவலாகி வருகிறது. அந்த வீடியோவானது சில வினாடிகள் மட்டும் இருந்தாலும், பார்க்கும் நம்மையே குழப்பத்தில் ஆழ்த்திவிடுகிறது. ஒரு கொக்கு  (Crane) தண்ணீரில் தனது இரையான மீனைப் பிடிப்பதற்கு நிற்கிறது. அந்த கொக்கானது சிறிய ஆறுபோல எதிர்த்துச் செல்லும் நீரில் நிற்கிறது. அதைப் பார்ப்பதற்கு அந்த கொக்கு ஆற்றில் (River)  நிதானமாக நடந்து செல்வது போல நமக்குத் தெரிகிறது. ஆனால் அந்த ஆறானது அந்த அளவிற்கு ஆழம் இல்லை. கொக்கின் கால் ஆழம் கூட அந்த ஆறு இல்லை.

ஆனால் முதலில் இந்த வீடியோவை பறக்கும்போது அந்த கொக்கு வேகமாக ஓடும் ஆறில் நடந்து செல்வதுபோல் தெரிகிறது. ஆனால் அவ்வாறு இல்லை, அந்த பறவையானது ஆழம் இல்லாத இடத்தில் எதிர்த்துவரும் நீரில் சிறு சிறு மீன்களை வேட்டையாடுவதற்காக நிற்கிறது.

வேகமாக ஓடும் அந்த நீரைப் பார்க்கும்போது அந்த கொக்குதான், நீரில் வேகமாக நடந்து செல்வதைப் போல் தெரிகிறது. இது முற்றிலும் நமது மூளையை ஏமாறும் மாயை போல இருக்கிறது. தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பல பயனர்கள் வீடியோவை பகிர்ந்து மற்றவர்களையும் குழப்பி வருகின்றனர்.

இணையத்தில் மக்களைக் கவரும் அந்த வீடியோ :

இந்த வீடியோவில் வெள்ளைநிற கொக்கு ஒன்று மீனை வேட்டையாட, எதிர்த்துவரும் நீரைக் கடந்து முன்னே செல்கிறது. ஆனால் இந்த வீடியோவை ஆரம்பத்தில் பார்க்கும்போது கொக்கு நீரில் வேகமாக நடந்து செல்வதைப் போல் தெரிகிறது. ஆனால் அவ்வாறு இல்லை, ஆறுபோன்று தோற்றமளிக்கும் அந்த நீர் வேகமாகச் செல்லுவதைப் பார்க்கும்போது நமக்கு அவ்வாறு தெரிகிறது. இதை ஆப்டிகல் இலுஷன் என்றும் கூறுவார்கள்.

இது இயற்பியலில் ஒன்றாகும். அந்த வீடியோவில் இரண்டாவதாக ஒரு கொக்கு வரும் வரை, அந்த மாயை நம்மைக் குழப்புகிறது. இந்த வீடியோவை Buitengebieden என்ற எக்ஸ் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவை இதுவரை சுமார் 2.7 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பார்வையிட்டுள்ளனர். தற்போது பார்ப்பவர்களைக் குழப்பும் இந்த வீடியோவை , நெட்டிசன்கள் ஷேர் செய்து மற்றவர்களையும் குழப்பி வருகின்றனர்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் சிலவற்றைப் பார்க்கலாம். இந்த வீடியோவில் முதல் பயனர் ஒருவர் ”நான் ஆரம்பத்தில் இந்த வீடியோவை பார்க்கும்போது, அதீத சக்திகூட பறவை நீரில் இவ்வாறு ஓடுகிறது என்று நினைத்தேன். ஆனால் அது நீரின் வேகம் என்று அதன் பிறகுதான் தெரிந்தது” என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் “இந்த வீடியோ முற்றிலும் குழப்பமாக இருக்கிறது, கொக்கு வேகமாகச் செல்கிறதா இல்லை, நீர் வேகமாகச் செல்கிறதா எனக் கேள்வி கேட்டுள்ளார்.

பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!
பயம் காட்டிய படோனி.. கடைசியில் பஞ்சாபிடம் சரணடைந்த லக்னோ..!...
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!
பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது - NBDA!...
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?
உங்கள் ஆதார் கார்டை வேறு யாரேனும் பயன்படுத்துகிறார்களா?...
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!
25 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலைக் குவித்த குட் பேட் அக்லி!...
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!
பறவை தண்ணீரில் நடக்கிறதா..? மில்லியன் மக்களைக் குழப்பிய வீடியோ!...
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி
அந்த காட்சியில் நானும் கார்த்தியும் பட்டினியா இருந்தோம்-பிரியாமணி...
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!
சிம்புவின் 'STR49' படப்பிடிப்பு பூஜை வீடியோவை வெளியிட்ட படக்குழு!...
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?
பருந்துக்கு பாஸ்போர்ட் கொடுத்த நாடு எது தெரியுமா?...
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!
அந்த டான்ஸ் வைத்ததற்குக் காரணம் இதுதான்- கார்த்திக் சுப்பராஜ்!...
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!
ரொம்ப நல்ல பொண்ணுங்க நானு.. மேடையில் பேசிய கயாடு லோஹர்!...
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!
ரன்பீர் - சாய் பல்லவியின் ராமாயணா படத்தை புகழ்ந்த பிரபலம்!...