Viral Video: சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!

Crocodile Attack Philippines : பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு விலங்குக் காட்சிசாலையில், ஒரு இளைஞர் முதலையை சிலை என எண்ணி அமர்ந்து விளையாடியதால் கடுமையான காயமடைந்தார். முதலையின் பலமான தாக்குதலால் அவரது காலில் 50 தையல் போடப்பட்டுள்ளது. வேறொரு நபரின் உடனடி உதவி இல்லையெனில், இளைஞரின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

Viral Video: சிலையென நினைத்து நிஜ முதலையிடம் சிக்கிய இளைஞன்!

வைரல் வீடியோ

Published: 

10 May 2025 22:55 PM

பொதுவாக முதலை  (Crocodile) என்றால் மிகவும் ஆக்ரோஷமான விலங்கு வகைகளில் ஒன்று. அவைகள் தரையில் எவ்வளவு பலசாலியோ அதைவிடத் தண்ணீரில் மிகவும் அதிகம் பலம் வாய்ந்தது. அந்த வகையில் பிலிப்பைன்ஸில் ( Philippines)  மிருக காட்சி சாலையில்  (zoo) அடைத்து வைக்கப்பட்டிருந்த முதலையை, சிலை என எண்ணி 29 வயது (Youth Man)  நபர் அமர்ந்து விளையாடியுள்ளார். ஆனால் அந்த முதலையானது மிகவும் பலம் வாய்ந்த உயிருள்ள முதலை ஆகும். சிலை  (Statue) என நினைத்து புகைப்படம் எடுக்க முயற்சி செய்து இந்த விபரீத முடிவில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த இளைஞனை முதலை மிகவும் பலமாகத் தாக்கியுள்ளது. தண்ணீரில் அங்கும், இங்குத்தாக புரண்டு புரண்டு பெரும் காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த இளைஞனின் விபரீத முடிவால், அவரின் காலில் சுமார் 50 தையல் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த பலமான முதலையின் வசமான பிடியில் இருந்து இளைஞனை அந்த அருங்காட்சியத்தில் வேலை செய்த மற்றொரு நபர் காப்பாற்றியுள்ளார்.

இது குறித்த வீடியோவானது தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும் இணையவாசிகள் பலரும் தங்களின் கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த அருங்கட்சியத்தில் வேலை செய்பவை மட்டும் வந்து காப்பாற்றவில்லை என்றால், அந்த இளைஞனின் கதி அன்றே முடிந்திருக்கும்.

வைரலாகும் முதலையின் வீடியோ இதோ :

இந்த வீடியோவில் , ஒரு பெரிய முதலையானது இருக்கிறது. அந்த முதலையானது இளைஞர் ஒருவரின் காலில் வசமாகக் கடித்துள்ளது. அந்த நபரை வீழ்த்துவதற்கு, முதலையானது அங்கும் இங்குமாக உருள்கிறது. இதைத் தொடர்ந்து அந்த மிருக காட்சி சாலையில் உள்ள மற்ற நபர்களும் அலறியபடியே பாதுகாப்பை நாடியுள்ளனர். அந்த இளைஞர் சிலை என எண்ணி முதலையிடம் கடி வாங்கிய விஷயமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபரைமிருக காட்சி சாலையில் வேலைசெய்யும் நபர் காப்பாற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலேயும் பயனர்கள் பலரும் வீடியோவின் கீழ் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் பல்வேறு பயனர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமான சில கருத்துக்களைப் பற்றிப் பார்க்கலாம். இதில் முதல் பயனர் ஒருவர் அந்த நபருக்கு இது தேவையா, மிருக காட்சி சாலையில் இருந்து சிலையா அல்லது உண்மையான முதலையா என்று தெரியாதா என்று கேட்டுள்ளார். இரண்டாவது பயனர் “அய்யயோ அந்த நபருக்கு வேறு இந்த காயங்களும் ஆகவில்லையே , கடவுளே உங்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.