Viral Video : உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்ணின் வீடியோ வைரல்!
Woman Quenching A Monkeys Thirst : ஒரு பள்ளி மாணவனின் பையிலிருந்து தண்ணீர் எடுக்க முயற்சிக்கும் குரங்கின் தாகத்தை, ஒரு பெண் தீர்த்து வைக்கும் காட்சி காட்டப்பட்டுள்ளது. இந்த அன்புமிக்க செயல் இணையத்தில் வைரலாகி, பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இந்த சம்பவம், மனிதர்களின் அக்கறையையும், விலங்குகளுக்கான அனுதாபத்தையும் எடுத்துக்காட்டுகிறது.

வைரல் வீடியோ
இந்த உலகத்தில் மனிதர்களுக்கு அடுத்தபடியான புத்திசாலி விலங்காக (smart animal) அறியப்படுவது குரங்குதான் (Monkeys) . இந்தியாவை பொறுத்தவரைப் பல மாநிலங்களில் (states) குரங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன. மேலும் இணையத்தில் அவ்வப்போது அவைகள் செய்யும் சேட்டை மற்றும் புத்திசாலித்தனமான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில் பள்ளி மாணவனின் பேக்கில் இருந்து தண்ணீரை எடுத்துக் குடிக்க முயற்சி செய்த குரங்கின் தாகத்தை தீர்த்த பெண்ணின் வீடியோ நெட்டிசன்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகத்தில் தாய்மை (Motherhood) என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பது இந்த வீடியோவை பார்ப்பதன் மூலம் தெரிகிறது.
அந்த குரங்கு தாகத்தை தீர்ப்பதற்காகப் பள்ளி மாணவனின் பையில் உள்ள வாட்டர் பாட்டிலை எடுக்க முயற்சி செய்கிறது. இதை பின்னால் இருந்து கவனித்த பெண் வாட்டரை பாட்டிலை மாணவனிடம் இருந்து வாங்கி, குரங்கின் தண்ணீர் தாகத்தைத் தீர்த்துள்ளார். தற்போது இந்த வீடியோவானது இணையத்தில் பயனர்களைப் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒரு குரங்கின் தாகத்தைக் கூட பெரிதாக எடுத்துக்கொண்டு அந்த பெண் செய்த செயலுக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோவை nilesh22.____ என்ற இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் வெளியிட்டுள்ளார். குரங்கின் தாகத்தைத் தீர்த்த அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
இணையத்தில் வைரலாகும் அந்த வீடியோ :
இந்த வீடியோவில், ஒரு குரங்கு ஒன்று ரயில்வே நிலையத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. அது பள்ளி மாணவன் ஒருவரின் பையில் இருக்கும், வாட்டர் பாட்டிலை எடுக்க முயற்சி செய்கிறது. இதன் காரணமாக அந்த மாணவன் அதனிடம் இருந்து தள்ளிச் தள்ளி செல்கிறார். அதை பின்னால் இருந்து கவனித்த பெண் ஒருவர், பள்ளி மாணவனிடம் இருந்து வாட்டர் பாட்டிலைப் பெற்று குரங்கிற்குத் தண்ணீரைக் கொடுக்கிறார். அந்த குரங்கும் சிறிய குழந்தையைப் போலத் தண்ணீரைக் குடிக்கிறது. இந்த வீடியோ பயனர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஒரு தாய்மையின் விளக்கமாக இந்த வீடியோ இருக்கிறது என்றும் பலர் கூறி வருகின்றனர். அந்த பெண்ணின் செயல் பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும், அவர் குரங்கின் தாகத்தைத் தீர்த்துள்ளார். தற்போதுள்ள காலகட்டங்களில் சூரியனின் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக மனிதர்களுக்கே தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறது. ஆனால் வறண்ட பூமியில் உயிரினங்களுக்குத் தண்ணீர் கிடைப்பது மிகவும் சவாலான விஷயமாக இருக்கிறது. அதன் காரணத்தால் வெய்யில் காலங்களில் உயிரிகளுக்கு உங்களால் முடிந்தவரைத் தண்ணீர் வைத்தால் நன்றாக இருக்கும்.
வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :
இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அதில் முதல் பயனர் ஒருவர் “அந்த பெண்ணின் மனது யாருக்கும் வராது, வாயில்லா ஜீவனின் தாகத்தை அறிந்து அவர் செய்த செயல் மிகவும் அருமை என்று பாராட்டியுள்ளார். இரண்டாவது நபர் குரங்கைச் சாதாரணமாக பார்ப்பதற்கு பயமாகத்தான் இருக்கிறது, ஆனால் அவைகள் மிகவும் அன்பானவை என்று கூறியுள்ளார்.