ஸ்மார்ட்போன்களுக்கு வரும் ஸ்பேம் கால்களை பிளாக் செய்வது எப்படி?.. ரொம்ப சிம்பிள்!

How to Block Spam Call | தொழில்நுட்ப வளர்ச்சியால் அதிகரித்து வரும் ஸ்பேம் அழைப்புகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள, இந்தியாவின் தேசிய ஸ்பேம் அழைப்பு தடைப் பதிவேட்டில் (NDNC) உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போன்களுக்கு வரும் ஸ்பேம் கால்களை பிளாக் செய்வது எப்படி?.. ரொம்ப சிம்பிள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

15 May 2025 19:34 PM

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக தொலைத்தொடர்பு (Tele Communication) சேவையும் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் காரணமாக ஒருவர் மற்றொருவரிடம் மிக சுலபமாக தொடர்புக்கொள்ள முடியும். பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் உள்ளவர்களை கூட ஒரு சில நொடிகளில் தொடர்புக்கொண்டு தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். இவ்வாறு தகவல் தொடர்பு அசாத்திய திறன்களை கொண்டுள்ள நிலையில், அதன் மூலம் மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்தியாவில் அதிகரிக்கும் போன் கால் மோசடிகள்

இந்தியாவில் போன் கால்கள் மூலம் மோசடி சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது. வங்கி ஊழியர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் போல் பேசி பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதை மோசடிக்காரர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இது ஸ்பேம் கால் (Spam Call) என அழைக்கப்படுகிறது. இது ஒரு பெரிய பிரச்சனையாக உள்ள நிலையில், ஸ்மார்ட்போன்களுக்கு வரும் ஸ்பேம் கால்களை பிளாக் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஸ்மார்ட்போனுக்கு வரும் ஸ்பேம் கால்களை பிளாக் செய்வது எப்படி?

ஸ்பேம் கால்கள் என்றால் மோசடிகள் மட்டுமன்றி, வணிக நோக்கம் காரணமாக பொதுமக்களை தொந்தரவு செய்வதும் இதில் அடங்கும். பொதுமக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யும் மூன்றாவது தரப்பு செயலிகளில் தொடர்பு விவரங்கள் திருடப்பட்டு அதன் மூலமும் இத்தகைய போன் கால்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. எனவே இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண ஒரு வழியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு ஸ்பேம் கால்கள் வராமல் தடுக்க முடியும். அதாவது, உங்கள் மொபைல் எண்ணை NDNC (National Do Not Call Registry)-ல் பதிவு செய்வதன் மூலம், உங்களுக்கு ஸ்பேம் கால்கள் வராமல் தடுக்கலாம்.

NDNC-ல் மொபைல் எண்ணை பதிவு செய்வது எப்படி?

  1. முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் குறுஞ்செய்தி செயலிக்கு செல்ல வேண்டும்.
  2. அதில் 1909 என்ற எண்ணுக்கு ஸ்டார்ட் (Start) என குறுஞ்செய்தி அனுப்புங்கள்.
  3. அப்போது உங்களுக்கு வங்கி உள்ளிட்ட பல ஆப்ஷன்கள் கொடுக்கப்படும்.
  4. அதில் நீங்கள் எந்த வகையான ஸ்பேம் கால்களை பிளாக் செய்ய விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  5. இதனை செய்து முடித்ததும் உறுதி செய்வதற்காக உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
  6. இதற்கு பிறகு 24 மணி கழித்து உங்களது மொபைல் எண்ணில் DND (Do Not Disturb) சேவை பயன்பாட்டிற்கு வந்துவிடும்.

மேற்குறிப்பிட்ட இந்த முறையை பின்படுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஸ்பேம் கால்களை முற்றிலுமாக தவிர்த்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.