அசத்தல் அம்சங்களுடன் கூடிய “WhatsApp Chat Theme”.. பயன்படுத்துவது எப்படி?
WhatsApp Chat Theme | வாட்ஸ்அப் செயலியில் பல வகையான சிறப்பு அம்சங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உள்ளன. இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட் தீம் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப செயலிகளில் ஒன்றாக உள்ளது தான் மெட்டா (Meta) நிறுவனத்தின் வாட்ஸ்அப் (WhatsApp) செயலி. இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்துகின்றனர். தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு என பல்வேறு சிறப்பு அம்சங்களை வாட்ஸ்அப் கொண்டுள்ளதால் பொதுமக்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே இது மாறிவிட்டது.
வாட்ஸ்அப்பில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் சாட் தீம்
என்னதான் வாட்ஸ்அப் செயலியில் பல அட்டகாசமான அம்சங்கள் இருந்தாலும், அதில் சில ஆபத்துக்களும் உள்ளன. குறிப்பாக வாட்ஸ்அப் கணக்குகள் தொடர் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன. அதனை தடுக்கும் வகையில் தான் மெட்டா நிறுவனம், வாட்ஸ்அப்பில் பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தி வருகிறது.
பாதுகாப்புக்கு மட்டுமன்றி, பொழுதுபோக்கிற்காகவும் பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாகவும் பல அப்டேட்கள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் வாட்ஸ்அப் செயலியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் வாட்ஸ்அப் சாட் தீம் (WhatsApp Chat Theme). இந்த நிலையில், வாட்ஸ்அப் சாட் தீம் என்றால் என்ன, அதனை பயன்படுத்துவது எப்படி, அதில் உள்ள சிறப்பு அம்சங்கள் என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம்.
வாட்ஸ்அப் சாட் தீம் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
பல நாட்களாக சோதனையில் இருந்ததாக கூறப்பட்டு வந்த வாட்ஸ்அப் சாட் தீம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து வகை பயனர்களும் இந்த சாட் தீமை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மெட்டா அறிவித்தது. இந்த அம்சத்தில் பல வண்ணங்கள் இடம் பெற்றுள்ளன. இது நாம் ஒவ்வொருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பும் போதும் பிரதிபலிக்கும். இந்த நிலையில், வாட்ஸ்அப்பின் இந்த சாட் தீம் அம்சத்தை பயன்படுத்துவது எப்படி என பார்க்கலாம்.
வாட்ஸ்அப் சாட் தீம் செட் செய்வது எப்படி?
- முதலில் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்அப் செயலியை திறக்க வேண்டும்.
- பிறகு வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து மெனுவை (Menu) கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு செட்டிங்ஸை (Settings) கிளிக் செய்து அரட்டைகளை (Chat) தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு அதில் இருக்கும் இயல்பு நிலை அரட்டை தீமை (Default Chat Theme) கிளிக் செய்ய வேண்டும்.
- அதில் தீம்கள் (Themes), அரட்டை நிறம் (Chat Colour) மற்றும் வால்பேப்பர்களை (Wallpaper) கூட தேர்வு செய்யலாம்.
- இந்த சாட் தீமை செட் செய்வதற்கு முன்பாக அவற்றை முன்னோட்டமிடும் வசதியும் உள்ளது. அதனை பயன்படுத்தி நீங்கள் தேர்வு செய்த தீம் பொருத்தமானதாக உள்ளதா என்பதை உறுதி செய்துக்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட நடைமுறைகளை பின்பற்றி மிக சுலபமாக உங்கள் வாட்ஸ்அப் கணக்கில் சாட் தீம் செட் செய்துக்கொள்ளலாம். பயனர்கள் தங்களுக்கு பிடித்தமான நபர்களுடன் சுவாரஸ்யமாக உரையாற்றும் வகையில் இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.