Skype : ஸ்கைப் செயலியை மூடிய மைக்ரோசாப்ட்.. வேறு என்ன செயலிகளை பயன்படுத்தலாம்?
Skype Shutdown From May 05 2025 | லட்சக்கணக்கான மக்கள் ஸ்கைப் செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், இன்று (மே 05, 2025) முதல் அதனை மூடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அதற்கு மாற்றாக என்ன என்ன செயலிகளை பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
வீடியோ கால் செயலிகளின் (Video Call Apps) முன்னோடியான ஸ்கைப் (Skype) செயலி இன்றுடன் (மே 05, 2025) மூடப்படுகிறது. மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் இந்த செயலியை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அதனை அந்த நிறுவனம் இன்றுடன் மூடுகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னரே ஸ்கைப் செயலியை நிறுத்தம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இன்றுடன் அதற்கு முடிவு கட்டப்படுகிறது. இந்த நிலையில் ஸ்கைப் செயலிக்கு மாற்றாக வேறு என்ன செயலிகள் பயன்படுத்தலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஸ்கைப் செயலியை மூடிய மைக்ரோசாப்ட் – காரணம் என்ன?
உடனடி தகவல் தொலைத்தொடர்புக்காக தொலைபேசிகள் மட்டுமே இருந்த நிலையில், தொலை தூரத்தில் இருப்பவர்களை கூட நேரில் சந்தித்து பேசுவதை போல முகம் பார்த்து பேச வழிவகை செய்த செயலி தான் ஸ்கைப். தற்போது பயன்பாட்டில் உள்ள பல வீடியோ கால் செயலிகளுக்கு எல்லாம் ஸ்கைப் முன்னோடி என்றால் அது மிகை ஆகாது. லட்சக்கணக்கான மக்கள் தங்களது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஒரு முதன்மை செயலியாகவே ஸ்கைப் இருந்தது.
இந்த நிலையில் பிப்ரவரி 28, 2025 அன்று ஸ்கைப் செயலியை மூட உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. அதன்படி, மூன்று மாதங்கள் கழித்து இன்றுடன் ஸ்கைப் செயலி மூடப்படுகிறது. அதன்படி மே 05, 2025 முதல் ஸ்கைப் செயலியை யாரும் பயன்படுத்த முடியாது என்பதை அந்த நிறுவனம் உறுதி செய்துள்ளது. மைக்ரோசாப்டில் உள்ள டீஸ்ம் (Teams) செயலியை மேம்படுத்த உள்ளதால் ஸ்கைப்பை கைவிடுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்கைப் செயலிக்கு பதிலாக நீங்கள் இவற்றை பயன்படுத்தலாம்?
ஸ்கைப் செயலி மூடப்படும் நிலையில், அதில் உள்ளதை போலவே சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த சில செயலிகளை பயன்படுத்தலாம்.
கூகுள் மீட்
கூகுள் மீட் (Google Meet) வீடியோ கால் பேசுவதற்கு ஒரு சிறப்பான செயலியாக கருதப்படுகிறது. ஏராளமான மக்கள் கூகுள் கணக்கை வைத்திருக்கும் நிலையில், அவர்களால் கூகுள் செயலியை எளிதாக பயன்படுத்த முடியும். இந்த கூகுள் செயலியை பயன்படுத்தி, ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கலாம்.
சூம்
சூம் (Zoom) வீடியோ கால் பேசுவதற்கு பயனுள்ளதாக கருதப்படும் மற்றொரு செயலியாக உள்ளது. இந்த செயலியில் பொதுவாகவும், தனியாகவும் உரையாடவும் முடியும். கூகுள் மீட் செயலியை போலவே இதிலும் ஒரே நேரத்தில் 100 பேர் உரையாட முடியும். இந்த செயலி மூலம் பயணர்கல் 40 நிமிடங்கள் வரை தடையில்லாமல் உரையாட முடியும்.