வெயிலுக்கு ரெஸ்ட்…. வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

Tamil Nadu Weather Alert : தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் 2025 மே 4ஆம் தேதியான இன்று அக்னி வெயில் துவங்க உள்ள நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை அலர்ட விடுக்கப்பட்டுள்ளது.

வெயிலுக்கு ரெஸ்ட்.... வெளுக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை மையம் அலர்ட்!

மழை

Updated On: 

04 May 2025 06:38 AM

சென்னை, மே 04 : தமிழகத்தில் கத்திரி வெயில் (Kathiri Veyil) 2025 மே 4ஆம் தேதியான இன்று தொடங்குகிறது. இருந்தாலும், தமிழகத்தில் சில நாட்களுக்கு வெப்பம் அதிகரிப்புக்காக வாய்ப்பு குறைவு என்று வானிலை மையம் (Tamil Nadu weather update) கூறியுள்ளது. மேலும், தமிழக்ததில் ஒருசில மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுக்கிறது. 2025 மார்ச் மாதம் முதலே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. தற்போது, உச்சத்தை எட்டி இருக்கிறது என்றே சொல்லலாம். இதில், 2025 மே 4ஆம் தேதியான இன்று அக்னி வெயில் துவங்குகிறது. இதனால், மே, ஜூன் முழுவதும் வெயில் கொடுமையாக இருக்கும்.

தமிழகத்திற்கு கனமழை அலர்ட்

கூடவே அனல் காற்றும் வீசக்கூடும் என கூறப்படுகிறது.  இந்த நிலையில், வானிலை மையம் குளுகுளு அப்டேட் விடுத்துள்ளது. அதாவது, தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 2025 மே 4ஆம் தேதியான இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

2025 மே 5ஆம் தேதியான நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். அதோடு, கோவை, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கணித்துள்ளது.

2025 மே 6ஆம் தேதி கோவை, நீலகிரி, ஈரோடு, தென்காசி, திண்டுக்கல், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறுப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, 2025 மே 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மாவட்டங்கள்?

சென்னையை பொறுத்தவரை, 2025 மே 4ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், 2025 மே 4ஆம் தேதி 7ஆம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கத்திரி வெயில் துவங்கும் நேரத்தில் தமிழகத்தில் கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு: ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் ரத்து!
‘சாமானியனுக்கு ஒரு விதி, போலீசாருக்கு ஒரு விதியா? காவல்துறையை வறுத்தெடுத்த திமுக எம்எல்ஏ இனிகோ, பின்னர் நடந்தது என்ன?
Sivagangai Custodial Death: சிவகங்கை வழக்கு சிபிஐக்கு மாற்றம்.. அஜித் குமார் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
Sivagangai Custodial Death: ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை.. சிசிடிவி காட்சிகளை மாற்றக்கூடாது! மாநில அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!
Sivagangai Custodial Death: சிவகங்கை லாக்அப் டெத்..! காவல்துறையை கடுமையாக விளாசிய உயர்நீதிமன்ற மதுரை கிளை!
ஈவு இரக்கமின்றி தாக்கிய போலீஸ்.. அலறும் இளைஞர் அஜித் குமார்.. காவல் நிலையத்தில் என்ன நடந்தது?