Tamilnadu Weather: புரட்டி எடுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
Tamil Nadu Weather Alert:சென்னை வானிலை மையம், 2025 மே 19 முதல் 21 வரை தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. நீலகிரி, கோவை போன்ற மலைப் பகுதிகளில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மே 21 முதல் 24 வரை தென் மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும். தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும் என்பதால், முதலமைச்சர் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்.

சென்னை மே 19: தமிழகத்தில் 2025 மே 21 வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் (Heavr Rain Alert) என வானிலை மையம் எச்சரிக்கை (Meteorological Department warning) வெளியிட்டுள்ளது. சென்னையில் மேகமூட்டம் மற்றும் லேசான மழையால் வெப்பம் குறைந்த நிலையில் காணப்படுகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை தொடரும். நீலகிரி, கோவை, சேலம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும், மலைப்பகுதிகளில் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது. 2025 மே 21 முதல் 24 வரை தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்; கடலோரத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட விரைவாக தொடங்கும் வாய்ப்பு உள்ளதால் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் (Chief Minister Stalin’s consultation meeting) நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எதிர்ப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. 2025 மே 21-ஆம் தேதி வரை வெப்பச்சலனத்தால் மழை தீவிரமடைய வாய்ப்பு உள்ளது.திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருச்சி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, ஈரோடு மற்றும் கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று 2025 மே 19 லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக மழை தொடரும்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. மேலும் 2025 மே 21-ஆம் தேதி கிழக்கு அரபிக்கடலில் மேலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 2025 மே 22-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பு உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கரூர், நாமக்கல், மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவையின் மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும்.
மே 21 முதல் 24 வரை மழை தொடரும்
2025 மே 21 முதல் 24 வரை தமிழகத்தின் ஓரிரு பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதே நேரத்தில், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்துடன் சூறாவளிக்காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா வெதர்மேன் கணிப்பு
வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் (டெல்டா வெதர்மேன்) வெளியிட்டுள்ள பதிவில், “திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். மேலும் கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் மழை பெய்யும்,” என குறிப்பிட்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கலாம்
தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கேரளாவில் 2025 மே 20-ஆம் தேதியே பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டிலும் பருவமழை முன்கூட்டியே தொடங்கும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு இயல்பை விட அதிகமான மழை பதிவாகும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஆலோசனை கூட்டம்
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (2025 மே 19) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.