கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

Sivaganga Quarry Accident : சிவகங்கை மாவட்டத்தில் கல்குவாரியில் மண் சரிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

கல்குவாரி விபத்து.. 5 பேர் உயிரிழந்த சோகம்.. முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

சிவகங்கை கல்குவாரி விபத்து

Updated On: 

20 May 2025 20:18 PM

சிவகங்கை, மே 20: சிவகங்கை மாவட்டத்தில் கல்குவாரியில் மண் சரிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். சிவகங்கை மாவட்டம் மல்லாக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமாக ஒரு கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அரசு அனுமதி பெற்ற குவாரியில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 மே 20ஆம் தேதியான இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 6 தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, 2025 மே 20ஆம் தேதியான இன்று 11 மணியளவில் திடீரென குவாரியில் மண் சரிவு ஏற்பட்டது. அப்போது, குவாரியில் இருந்த பாறைகள் உருண்டு விழுந்தன.

கல்குவாரி விபத்தில் 5  பேர் உயிரிழந்த சோகம்

இதில், அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 6 பேர் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 3 பேரும் படுகாயங்களுக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். கல்குவாரி விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் முருகானந்தம், ஆறுமுகம், ஆண்டிச்சாமி, கணேஷ், அர்ஜித் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் டிஎஸ்பி செந்தில் குமார், அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த விபத்தை அடுத்து, குவாரியின் உரிமம் குறித்து விசாரணை நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், கல்குவாரி உரிமையாளர், மேலாளர் உள்ளிட்ட 3 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு