தெரு நாய்களால் தொடரும் தொல்லை… பெண் ஐஏஎஸ் அதிகாரியை நாய் கடித்ததால் பரபரப்பு

Chennai Dog Attack: சென்னையில் ராயப்பேட்டையில் நடைபயிற்சி சென்ற ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி நாய்க்கடிக்கு ஆளானார். நாயின் உரிமையாளர் சுரேஷ் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் அதிகரித்துவரும் நாய்க்கடி சம்பவங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. காயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

தெரு நாய்களால் தொடரும் தொல்லை... பெண் ஐஏஎஸ் அதிகாரியை நாய் கடித்ததால் பரபரப்பு

பெண் ஐஏஎஸ் அதிகாரியை நாய் கடித்ததால் பரபரப்பு

Published: 

09 May 2025 15:10 PM

சென்னை மே 09: சென்னை ராயப்பேட்டையில் (Chennai Dog Bite) 2025 மே 09 இன்று காலை நடைபயிற்சி சென்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி (IAS Officer Uma Maheswari) மீது நாய் இருமுறை கடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேவைகள் தேர்வு வாரிய தலைவராக உள்ள இவர், காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் வீடு திரும்பினார். நாயின் உரிமையாளரான சுரேஷ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன், போலீசார் விசாரணை (Chennai Police) நடத்தி வருகின்றனர். தற்போது சென்னையில் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனைத் தொடர்ந்து, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நடைபயிற்சியில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை ராயப்பேட்டையில் 2025 மே 09 இன்று காலை நடைபயிற்சி சென்ற பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நாய் கடியால் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ சேவைகள் தேர்வு வாரியத்தின் தலைவராக பணியாற்றும் உமா மகேஸ்வரி, 2025 மே 09 இன்று காலை தனது கணவருடன் ராயப்பேட்டை பாலாஜி நகர் முதல் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு இருந்த ஒரு வீட்டின் வளர்ப்பு நாய் திடீரென இவரை இருமுறை கடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை

நாய் கடித்ததால் காயமடைந்த உமா மகேஸ்வரிக்கு உடனடியாக மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர், அவர்கள் வீடு திரும்பினர். இது தொடர்பாக நாயின் உரிமையாளரான சுரேஷ் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்களின் தொந்தரவு தொடருகிறது

சென்னையில் தெரு நாய்கள் மற்றும் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக உள்ளன. நாளுக்கு நாள் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுவாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த காலங்களில் நாய்கடியில் பலத்த காயங்கள் மற்றும் உயிரிழப்பும் பதிவாகியுள்ளது.

பொதுமக்கள் கோரிக்கை

இந்த நிகழ்வு மூலமாக, சென்னையில் நாய்கள் கட்டுப்பாடின்றி திரிபது தொடர்பாக மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள், நகரத்தில் நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

நாயின் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு

நாயின் உரிமையாளராக இருக்கும் சுரேஷ் மற்றும் அவரது மனைவி ஸ்ரீஜா மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாய்கள் மூலம் ஏற்படும் பாதுகாப்பு சிக்கல்கள் மீண்டும் பரபரப்பாகியுள்ளது. இதன் பின்னணியில், நாய்கள் கட்டுப்பாடின்றி வளர்க்கப்படும் சூழ்நிலையை கண்டித்து பொதுமக்கள் கடுமையான நடவடிக்கையை கோருகின்றனர்.