எலான் மஸ்க்-க்கு தொடர்பா? தமிழக மக்களே உஷார்-எச்சரிக்கும் சைபர் கிரைம்
Tamil Nadu Police Warn: தமிழ்நாட்டில் எலான் மஸ்க் பெயரில் கிரிப்டோ முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர். போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் இணையதளங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். எலான் மஸ்க் எந்தவொரு கிரிப்டோ முதலீட்டையும் ஆதரிக்கவில்லை என்பதை போலீசார் தெளிவுபடுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு மே 02: இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சைபர் குற்றங்கள் (Cybercrimes) நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. உலக புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க் (Elon Musk) பெயரில் கிரிப்டோ முதலீட்டு மோசடிகள் (Crypto investment scams) நடைபெறுவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் (Tamil Nadu Cyber Crime Police) எச்சரிக்கை விடுத்துள்ளனர். போலி வீடியோ, புகைப்படங்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இதுவரை 26 போலி இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் 14 போலி இணையதளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலான் மஸ்க் எந்தவொரு கிரிப்டோ முதலீட்டையும் ஆதரிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். அதிக லாபம் அளிக்கும் எனக் கூறும் விளம்பரங்களை நம்ப வேண்டாம் எனவும், மோசடிக்கு ஆளானவர்கள் 1930-ல் புகார் அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் பெயரில் கிரிப்டோ மோசடி : சைபர் போலீசார் எச்சரிக்கை
உலக புகழ்பெற்ற தொழில் அதிபரும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் செயல்படுபவருமான எலான் மஸ்க், வலைத்தளங்கள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது ஆலோசனைகள் வழங்கி வருகிறார். தொழில்முனைவோர்கள் மற்றும் பெரிய நிறுவன ஊழியர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பதன் மூலம் பெயர் பெற்றவர்.
இந்த நிலையிலேயே, எலான் மஸ்க் மற்றும் அவரது தந்தை எரோல் மஸ்க் கிரிப்டோ நாணய முதலீடுகளை ஆதரிக்கிறார்கள் எனக் கூறி போலி வீடியோ மற்றும் புகைப்படங்களை பயன்படுத்தி நிதி மோசடி நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் மூலம் பலர் பணத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.
பலரும் மோசடிக்குள் சிக்கியதாக தகவல்
தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்ததாவது: “மக்கள், சமூக வலைத்தளங்களில் பரவும் போலி விளம்பரங்களை நம்பி கிரிப்டோ முதலீடுகளில் பணத்தை இழந்து வருகிறார்கள். இது தொடர்பாக நடந்த விசாரணையில், இதுவரை 26 போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகள் மற்றும் 14 போலி இணையதளங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.
எலான் மஸ்க் கிரிப்டோ முதலீட்டை ஆதரிக்கவில்லை
மேலும், தொழிலதிபர் எலான் மஸ்க் எந்தவொரு கிரிப்டோ முதலீட்டு செயலியையும் அல்லது இணையதளத்தையும் ஆதரிக்கவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்றும், “அதிக லாபம்” என்ற அடிப்படையில் வரும் விளம்பரங்கள் முழுமையாக மோசடியாக இருக்கக்கூடும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எங்கு புகார் அளிக்கலாம்?
சைபர் மோசடிக்கு ஆளானவர்கள் தொடர்பு எண்: 1930 என்பதற்குத் தொலைபேசி செய்து புகார் அளிக்கலாம். மேலும், www.cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம். சந்தேகத்திற்கிடமான தகவல்கள் அல்லது சம்பவங்களை நீங்கள் எதிர்கொண்டால், உடனே நடவடிக்கை எடுக்குமாறு சைபர் போலீசார் கேட்டுள்ளனர். இந்தியா முழுவதும், குறிப்பாக சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.