Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முத்தலாக் சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?

Uttar Pradesh Crime News : வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்த கணவர் முத்தலாக் கூறியதால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொலைபேசி மூலம் முத்தலாக் கூறியதை அடுத்து, மன வேதனையில் இருந்த இளம்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தலாக் சொன்ன கணவர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. நடந்தது என்ன?
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 May 2025 18:56 PM

உத்தர பிரசேதம், மே 02: உத்தர பிரதேசத்தில்  கணவர் முத்தலாக் கூறியதால், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசி மூலம் கணவர் முத்தலாக் கூறியதை அடுத்து, மன வேதனையில் இருந்த பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்தவர் சானியா. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சலாவுதீன் என்ற நபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆகஸ்ட் 7, 2023 அன்று திருமணம் நடந்துள்ளது. இதற்கிடையில், சலாவுதீன் குடும்பத்தினர் அதிகளவிலான வரதட்சனை கேட்டுள்ளனர். அவர்கள் கேட்டப்படியே சானியா குடும்பத்தினர் கொடுத்துள்ளனர்.

முத்தலாக் சொன்ன கணவர்

இதனை அடுத்து, கேரப்பூரில் மாமியார், கணவருடன் சானியா வசித்து வந்துள்ளார்.  அப்போது, சானியாவை அவரது கணவர், அவரது தாயார் சாய்ரா, மைத்துனர்கள் ஆசியா, குஷ்பூ மற்றும் ரோஸி, மைத்துனர்கள் ஜியா-உல்-ஆவுதீன் மற்றும் பலாவுதீன் ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

இந்த துன்புறுத்தல் தாங்க முடியாமல், சானியா இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறி இருக்கிறார். அவர்களும் கூடுதல் வரதட்சணை கொடுத்ததாக தெரிகிறது.  இருப்பினும், சானியாவின் மாமியார் மற்றும் கணவர் தொடர்ந்து வரதட்சனை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சானியாவுக்கு சலாவுதீன் தனி தங்குமிடத்தை ஏற்பாடு செய்தார்.

ஆனால், அங்கிருந்து சானியா வெளியேறி, 2025 ஏப்ரல் 26ஆம் தேதி கோரப்பூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு திரும்பினார்.  இருந்தாலும், தாய் வீட்டில் இருக்கும்போதே, கணவர் சலாவுதின் தொலைபேசி வாயிலாக அவரை துன்புறுத்தி வந்துள்ளதாக தெரிகிறது.

இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

தனது கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கொடுமைப்படுத்துவதாக கூறி, சௌரி சௌரா காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றிருக்கிறார்.  ஆனால், போலீசார் எந்த வழக்கும் பதியவில்லை. இந்த நிலையில், தான் சம்பவத்தன்று கணவர் சலாவுதின் சானியாவுக்கு தொலைபேசி மூலம் விவாகரத்துக்கான முத்தலாக் கூறி உள்ளார்.

இதனால், மன வேதனையில் சானியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதனை அறிந்த பெற்றோர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணையும் நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், சானியின் புகாரை நிராகரித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்த சப் இன்ஸ்பெக்டர் ஜெய்பிரகாஷ் சிங்கை சஸ்பெண் செய்யப்பட்டார். இந்த உததரவை கூடுதல் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) கௌரவ் குரோவர் பிறப்பித்தார். மேலும், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், மகாராஷ்டிராவின் ரசாயனி பகுதியைச் சேர்ந்த சானியாவின் கணவர் சலாவுதீன் உட்பட எட்டு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகள்.. ரூ,2000 அபராதம்!
தமிழ் பெயர் பலகை இல்லாத கடைகள்.. ரூ,2000 அபராதம்!...
வெயிலுக்கு சின்ன பிரேக்.. வெளுக்கப்போகும் கனமழை!
வெயிலுக்கு சின்ன பிரேக்.. வெளுக்கப்போகும் கனமழை!...
மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?
மாற்றுத்திறனாளி பயணிகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?...
கோடையில் சிறப்பு வகுப்புகள்.. தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்!
கோடையில் சிறப்பு வகுப்புகள்.. தனியார் பள்ளிகளுக்கு வார்னிங்!...
GTvSRH: 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி
GTvSRH: 38 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி...
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...