Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்… முடிவை மாற்றும் பெற்றோர்!

தமிழ்நாட்டில், தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டம் (RTE) மூலம் ஒதுக்கப்பட்ட 25% இடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. 2022-23ல் 74,296 மாணவர்கள் சேர்ந்திருந்த நிலையில், 2023-24ல் 70,452 ஆகக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம், அரசு பள்ளிகளில் 'இல்லம் தேடி கல்வி', 'நான் முதல்வன்' போன்ற திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள் பெற்றோர்களை ஈர்த்துள்ளது.

அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்… முடிவை மாற்றும் பெற்றோர்!
அரசு பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 02 May 2025 08:32 AM

தமிழ்நாடு மே 02: தனியார் பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (RTE-Right to Education Act) மூலம் ஒதுக்கப்படும் 25% இடங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. 2022-23ஆம் கல்வியாண்டில் 74,296 பேர் சேர்ந்திருந்த நிலையில், 2023-24ஆம் ஆண்டில் அது 70,452ஆக குறைந்தது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளை நோக்கி அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது 1.60 லட்சம் பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள நிலையில், 2025 ஜூன் 2ஆம் தேதிக்குள் இந்த எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்வித்துறையில் (Education Department) அரசு நடைமுறைப்படுத்தும் ‘இல்லம் தேடி கல்வி’, ‘நான் முதல்வன்’ (Illam Thedi Kalvi Thittam, Naan Muthalvan) உள்ளிட்ட திட்டங்கள் பெற்றோரிடம் நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளன. மேலும், வெளிநாட்டு பயண வாய்ப்பு உள்ளிட்ட வாய்ப்புகள் அரசு பள்ளிகளின் முக்கிய ஈர்ப்பாக உள்ளன.

இலவச கல்விக்கான அரசு ஒதுக்கீடு

தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (RTE) கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடங்கள் ஏழை மற்றும் இடர்ப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எல்.கே.ஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் சேரும் மாணவர்களிடம் அரசு பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

விண்ணப்ப செயல்முறை மற்றும் அரசு நடவடிக்கை

ஆர்.டி.இ. சேர்க்கைக்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் இணையவழி விண்ணப்பப் பதிவு நடைபெறும். இதற்காக பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டு, வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் 2013-14ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.

மாணவர் சேர்க்கை குறைவு: எண்ணிக்கையில் கவலை

பள்ளிக் கல்வித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பகிர்ந்த தகவலின்படி, 2022-23ஆம் கல்வியாண்டில் 74,296 மாணவர்கள் RTE மூலம் சேர்ந்திருந்தனர். ஆனால், 2023-24ஆம் கல்வியாண்டில் இந்த எண்ணிக்கை 70,452 ஆக குறைந்தது. இது, பல பெற்றோர்கள் அரசு பள்ளிகளை விரும்பத் தொடங்கியுள்ளதைக் காட்டுகிறது.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரும்

தற்போதைய நிலவரப்படி, 1.60 லட்சம் பேர் அரசு பள்ளிகளில் சேர்ந்து விட்டனர். ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் முன்னதாக இந்த எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 2024-25 கல்வியாண்டிலும் RTE சேர்க்கையில் மேலும் வீழ்ச்சி ஏற்படும் என கூறப்படுகிறது.

அரசு பள்ளி திட்டங்கள் பெற்றோர் கவனத்தை ஈர்க்கின்றன

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பள்ளிக் கல்வித்துறையில் தனிப்பட்ட முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி, புதுமைப் பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருது மற்றும் வெளிநாட்டு பயண வாய்ப்புகள்

மேலும், அரசு பள்ளிகளில் நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப் பயண வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இது போன்ற வாய்ப்புகள் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் கிடைப்பதில்லை. இதுவும் மாணவர்கள் அரசு பள்ளிகளை நோக்கி திரும்புவதற்கான முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...
ஒரே ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?
ஒரே ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?...
தனுஷிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
தனுஷிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!...
உங்களின் காதலர் யார் ? ரசிகர் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதில்
உங்களின் காதலர் யார் ? ரசிகர் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதில்...
அதிமுக செயற்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!
அதிமுக செயற்குழு கூட்டம் - 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!...
தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது - நிர்மலா சீதாராமன் கேள்வி
தமிழகத்தில் சமத்துவம் எங்கே இருக்கிறது - நிர்மலா சீதாராமன் கேள்வி...
"பலருக்கு தூக்கம் வராது" காங்கிரஸை விமர்சித்த பிரதமர் மோடி!
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகியது ஏன்? விராட் கோலி பதில்
சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விலகியது ஏன்? விராட் கோலி பதில்...
கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ - அரசு அனுமதி!
கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ - அரசு அனுமதி!...
சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட்.. ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் தடை!
சஞ்சு சாம்சனுக்கு சப்போர்ட்.. ஸ்ரீசாந்துக்கு 3 ஆண்டுகள் தடை!...