‘தலை இருக்காது’ சீமானுக்கு இன்ஸ்டாவில் கொலை மிரட்டல்.. இளைஞர் கைது!
Death Threat To Seeman : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் சந்தோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். ஆண்டிப்பட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த இவரை, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மே 02 : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் (naam tamilar katchi) சீமானுக்கு (Seeman) கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர் ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந் சந்தோஷ் என்பவர் தெரியவந்துள்ளது. இவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் இன்ஸ்டகிராம் பக்கத்தில் சீமானுக்கு பகீரங்கமாக கொலை மிரட்டல் விடுத்திருந்தார். தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தலுக்கு சரியாக ஓராண்டே இருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சீமானுக்கு இன்ஸ்டாவில் கொலை மிரட்டல்
குறிப்பாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், சில சர்ச்சையிலும் சிக்கி வருகிறார். அண்மைக் காலங்களில் அரசியல் மேடையில் சீமான் கலைஞர், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பேசி வருகிறார். இது பல்வேறு தரப்பினரிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.
இதற்கு எதிராக அவர் மீது புகாரும் கொடுக்கப்பட்டு நீதிமன்றத்திலும் வழக்கு நடந்து வருகிறது. அதோடு, பிற மொழி மக்கள் குறித்து அவதூறு பரப்பி வருகிறார். தமிழை முன்வைத்து அரசியல் பயணம் மேற்கொண்டு வரும் சீமான், அண்மையில் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இப்படியான சூழலில் தான், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, இன்ஸ்டாகிராமில் சீமானுக்கு கெலை மிரட்டல் விடுக்கப்பட்டது. அதாவது, சீமான் தலை துண்டாக்கப்படும் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேர்தல் விரைவில் நடத்த வேண்டிய சூழல் இருக்கும் என ஒருவர் குறிப்பிட்டதாக தெரிகிறது.
தேனி இளைஞர் கைது
மேலும், கட்சி சார்பில் இரங்கல் குறிப்பும் வரும் என குறிப்பிட்டதாக தெரிகிறது. இதனால், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பதறினர். இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்சியின் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் புகார் அளித்தார்.
இந்த நிலையில், சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர் தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக போலீசார் கூறுகின்றனர். அவர் ஆண்டிப்பட்டி ஜக்கன்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்துள்ளது.
இவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர். அண்மையில், தெலுங்கு பேசும் மக்கள் அவதூறாக பேசியதால் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.