Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மே 6-ல் 7 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Tamil Nadu Heavy Rainfall Alert | தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மே 6, 2025 அன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், அன்றைய தினம் எந்த எந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

மே 6-ல் 7 மாவட்டங்களுக்கு கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 02 May 2025 16:06 PM

சென்னை, மே 2 : தமிழகத்தில் மே 6, 2025 அன்று 5 மாவட்டங்களின் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (Chennai Meteorological Department) கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மே 5, 2025 முதல் கத்திரி வெயில் தொடங்கப்பட உள்ளதாக முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. தற்போது, கத்திரி வெயில் தொடங்கும் அடுத்த நாளே 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும்  வாய்யு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி அன்றைய தினம் எந்த எந்த மாவட்டங்களின் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வழக்கத்தை விட வெப்பமும், மழையும் அதிகமாக இருக்கும் – இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் மிக தீவிரமாக இருந்து வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 15, 2025 முதல் வெப்பம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மே 5, 2025 அன்று கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் தீவிரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே ஏப்ரல் 30, 2025 அன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவில் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக வெப்பம் நிலவும் என்றும், அதேபோல அதிக அளவு கோடை மழையும் இருக்கும் என்றும் கூறியிருந்தது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட வெப்ப அலை நாட்கள் அதிகமாக இருக்கும் என்றும் கூடியிருந்தது.

5 மாவட்டங்களுக்கு கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

இந்த நிலையில், இன்று (மே 2, 2025) அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் மே 6, 2025 அன்று தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்றும் (மே 2, 2025), நாளையும் (மே 3, 2025) தகிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல மே 4, 2025 மற்றும் மே 5, 2025 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...