Dhanush : ஹீரோவாக அறிமுகமாகும் விஜே சித்து.. அறிவிப்பை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த தனுஷ்!
VJ Siddhus New Movie : VJ Siddhus New Movie : தமிழில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தவர் விஜே சித்து. இவர் பிரபல தமிழ் யூடியூபர் ஆவார். இந்நிலையில் அவரின் இயக்கத்தில், அவரே கதாநாயகனாக நடிக்கவுள்ள திரைப்படம் டயங்கரன். இந்த படத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ள நிலையில், நடிகர் தனுஷ், விஜே சித்துவின் படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வாழ்த்துக்களைக் கூறியுள்ளார்.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குநர் , தயாரிப்பாளர் மற்றும் பாடகர் என பல்வேறு திறமைகளைக் கொண்டவர் தனுஷ் (Dhanush). இவர் தமிழில் படங்களில் நடிப்பதைத் தண்டி தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் இட்லி கடை (Idly Kadai) , குபேரா (Kuberaa), தேரே இஷ்க் மெய்ன் மற்றும் டி55 என அடுத்தடுத்த படங்கள் உருவாகிவருகிறது. மேலும் தனுஷ் தேரே இஷ்க் மெய்ன் படத்தில் நடிப்பதில் மும்முரம் காட்டிவருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக வட இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து தமிழில் மட்டுமே சுமார் 3 படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். இந்த படங்களை எல்லாம் தொடர்ந்து ஹாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் தனுஷ், பிரபல யூடியூபர் விஜே சித்து (YouTuber VJ Sidhu), நடிகனாகவும் மற்றும் இயக்குநராகவும் அறிமுகமாகும் டயங்கரம் (Dayangaram) என்ற படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவை வெளியிட்டு, ஹீரோவாக அறிமுகமாகும் விஜே சித்துவின் சினிமா நுழைவிற்கு வாழ்த்துகளைக் கூறியுள்ளார். இது விஜே சித்துவின் ரசிகர்கள் மத்தியிலும், தனுஷ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :
Glad to launch the announcement video of #Dayangaram — marking @VJSiddhuOG’s directorial debut and his first as a lead actor. Welcome to the world of cinema, Siddhu. Wishing you and the @VelsFilmIntl team, and @IshariKGanesh sir, all the best for a journey filled with big dreams.…
— Dhanush (@dhanushkraja) May 2, 2025
நடிகர் தனுஷ் இந்த பதிவில், விஜே சித்து, இயக்குநராகவும் மற்றும் நடிகராகவும் புதிய படத்தில் அறிமுகமாகவுள்ளார். விஜே சித்துவிற்கு வாழ்த்துக்களுடன் சினிமா உலகத்திற்கு வரவேற்கிறேன். மேலும் பெரிய கனவுகள் நிறைந்த பயணம் அமைய வாழ்த்துகள். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் சாருக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றும் நடிகர் தனுஷ் பதிவிட்டுள்ளார்.
விஜே சித்துவின் சினிமா நுழைவு :
பிரபல யூடியூபர் விஜே சித்து, கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் வெளியான டிராகன் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இந்த திரைப்படத்தைப் பிரபல இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் முன்னணி நடிப்பில் வெளியான இந்த படத்தில் , அவரின் நண்பர் கதாபாத்திரத்தில் விஜே சித்து நடித்திருந்தார். இந்த பாதத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு எவ்வாறு வரவேற்பு கிடைத்ததோ, அதைப்போல விஜே சித்துவிற்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இவர் ஹீரோவாகவும், இயக்குநராகவும் அறிமுகமாகும் முதல் படம்தான் டயங்கரன். இந்த படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். இந்த படமானது முட்டிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த படத்தின் அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது