Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Silambarasan : சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்.. ரசிகர்களுக்கான சூப்பர் அப்டேட் இதோ!

STR 49 Shooting Update : கோலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சிலம்பரசன். தக் லைப் படத்தை அடுத்து இவர் நடிக்கவுள்ள படம் STR 49. இந்த படத்தை பார்க்கிங் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். பிரம்மாண்ட கதைக்களத்துடன் உருவாக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் மற்றும் படப்பிடிப்பு பூஜைகள் பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Silambarasan  : சிம்புவின் STR 49 படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம்.. ரசிகர்களுக்கான சூப்பர் அப்டேட் இதோ!
சிம்புவின் STR 49Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 02 May 2025 16:34 PM

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் இறுதியாக வெளியான படம் பத்து தல (Pathu Thala). இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு இயக்குநர் ஒபேலி என். கிருஷ்ணா இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றி பெற்றது . இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam)  இயக்கத்தில் தக் லைப் (Thug Life) படத்தில் கதாநாயகனாக நடித்து வந்தார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் (Kamal Haasan) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் அடுத்தடுத்த 3 படங்களில் கமிட்டாகியுள்ளார். அதில் முதல் படம் STR 49. இந்த படத்தை ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் (Parking) படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்  (Ramkumar Balakrishnan) இயக்கவுள்ளார். மேலும் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் இதில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் சிறப்பாக நடந்துவந்த நிலையில், அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகளானது வரும் 2025, மே 3ம் தேதியில் பூஜைகளுடன் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் STR 49 படத்தின் படப்பிடிப்பு 2025, மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங், நாளை 2025 மே 3ம் தேதி முதல் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

STR 49 படக்குழு வெளியிட்ட பதிவு :

நடிகர் சிலம்பரசனின் இந்த STR 49 திரைப்படத்தில் நடிகர் சந்தானமும் சிறப்புக் கதாபாத்திரத்தில் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரின் கூட்டணியில் இதுவரை வெளியான படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டான நிலையில், மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது.

நடிகர் சந்தானம் சமீப ஆண்டுகளாக படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். காமெடியனாக கலக்கிவந்த இவர் கதாநாயகனாகப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இதுவரை சுமார் 10க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் நடிகர் சிலம்பரசனின் STR 49 படத்தில் சிறப்பும் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் சுமார் ரூ. 7 கோடிகளைச் சம்பளமாகக் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

சிலம்பரசனின் இந்த இப்படத்தில் இவருடன் சந்தானம் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபையங்கர் இசையமைக்கவுள்ளார். அவர் இந்த படத்திற்காக ஏற்கனவே 3 பாடல்களைத் தயார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை டான் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?...
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!
Kidney Health : சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் 5 சிறந்த உணவுகள்!...
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?
கார்பைடு மாம்பழங்களை எளிதில் கண்டுபிடிப்பது எப்படி?...
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...