Dhanush : தனுஷிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
Dhanush Favorite Actor : கோலிவுட் சினிமாவில் சுமார் 23 வருடங்களுக்கு மேலாகப் படங்களில் நடித்து வருபவர் தனுஷ். இயக்குநர் குடும்பத்தில் பிறந்த ஐவரும் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் சினிமாவில் கலக்கி வருகிறார். முன்னதாக ஒரு நேர்காணலில் பேசியிருந்த தனுஷ் அவருக்குப் பிரித்த நடிகரைப் பற்றிப் பேசியிருந்தார். அதைப் பற்றி விவரமாகப் பார்க்கலாம்.

தமிழில் தனது தந்தை கஸ்தூரி ராஜாவின் (Kasthuri Raja) இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை (Thulluvadho Ilamai) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் நுழைந்தவர் தனுஷ் (Dhanush). இந்த படமானது அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து, அடுத்தடுத்த இயக்குநர்களுடன் படங்களில் பணிபுரியத் தொடங்க இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்புகள் கிடைத்தன. இதை தொடர்ந்து பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். மேலும் சினிமாவில் சுமார் 23 வருடங்களுக்கும் மேல் அனுபவம் கொண்ட தனுஷ், இயக்குநராகவும் படங்களை இயக்கி வருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை சுமார் 3 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் 2 படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தமிழில் இட்லி கடை (Idly Kadai ) என்ற படத்தில் இயக்குநராகவும், ஹீரோவாகவும் பணியாற்றியுள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக முடிவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது . மேலும் தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் அவருக்குப் பிடித்த நடிகர் பற்றிப் பேசியிருப்பார். அதில் தனுஷ் தமிழில் பல நடிகர்கள் இருந்தாலும் ரஜினிகாந்த்தின் நடிப்பிற்கு ஈடாகாது, அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியிருந்தார். மேலும் அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம் .
நடிகர் தனுஷ் பேசிய விஷயம் :
முன்னதாக கலந்துகொண்ட நேர்காணலில் நடிகர் தனுஷிடம் தொகுப்பாளர், தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார், அதுவும் ரஜினிகாந்த்தைத் தவிர உங்களுக்கு யார் மிகவும் பிடிக்கும்? என்று கேட்டிருந்தார். அதற்கு நடிகர் தனுஷ் “தமிழ் சினிமாவில் எனக்குப் பிடித்த நடிகர் ரஜினிகாந்த் சாரை தவிர யாரும் இருக்கமுடியாது , அவருக்கு ஈடாகத் தமிழ் சினிமாவில் யாரும் இல்லை. அதனால் எனக்கு ரஜினிகாந்த் சார்தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்தார்.
நடிகர் தனுஷின் புதிய திரைப்படங்கள் :
நடிகர் தனுஷ் தமிழில் நடித்து வந்த இட்லி கடை படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து அவர் இந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்ற படத்தில் பிசியாக இருந் வருகிறார். இந்த படத்தைப் பிரபல பாலிவுட் இயக்குநர் ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார்.இவர்தான் தனுஷின் ரஞ்சனா என்ற சூப்பர் ஹிட் படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஞ்சனா, தமிழில் அம்பிகாபதி என்று வெளியான படத்தின் இயக்குநருடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை சனோன் கிருதி நடித்து வருகிறார். மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இதைத் தொடர்ந்து தமிழில் டி55,டி56 மற்றும் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.