Operation Sindoor : இந்திய ராணுவம் குறித்து விமர்சனம்.. பேராசிரியை பணியிடை நீக்கம்!

Chennai Professor Suspended For Criticizing Indian Army | பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்துள்ளது. இதற்கு சில தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்திய ராணுவத்தை விமர்சித்த பேராசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Operation Sindoor : இந்திய ராணுவம் குறித்து விமர்சனம்.. பேராசிரியை பணியிடை நீக்கம்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 May 2025 17:09 PM

சென்னை, மே 09 : ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) விவகாரத்தில் இந்திய ராணுவத்தை (Indian Army) விமர்சனம் செய்த சென்னை பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா – பாகிஸ்தான் மோதல் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை பதிவுடும் நபர்களை இந்திய அரசு கவனித்து வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான சமூக வளைதள கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில், சமூக வளைதளத்தில் இந்திய ராணுவத்தை விமர்சித்த பேராசிரியை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் இந்திய அரசு

ஏப்ரல் 22, 2025 அன்று ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பகல்காம் பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகள் மீது கொடூர துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதில் வெளிநாட்டைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் உட்பட 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) அமைப்பு இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்திய அரசு தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

முதற்கட்டமாக ஆட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றும் என சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது போர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்ரேஷன் சித்திரை கையில் எடுத்த இந்திய அரசு பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கி இருந்த முகாம்களின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டதாக நேற்று (மே 08, 2025)  நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

இந்தியா ராணுவம் மீது விமர்சனம் – சென்னை பேராசிரியர் பணியிடை நீக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து எதிர்மறையான கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில் பொதுமக்களின் சமூக ஊடக கணக்குகளை அரசு கண்காணித்து வருகிறது. அதன்படி, இதுவரை இந்தியாவில் சுமார் 8,000 எக்ஸ் கணக்குகளை அரசு முடக்கியுள்ளது. இந்த நிலையில், இந்திய ராணுவம் குறித்து சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்த சென்னை தனியார் கல்லூரி பேராசிரியை லோராவை பணியிடை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.