பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்

BJP-Tamil Nadu Victory Party Alliance: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் பாஜக கூட்டணி குறித்து துணை பொதுச் செயலாளர் சிடி நிர்மல் குமார் அளித்த அறிக்கைக்கு மாறுபட்ட விளக்கம் அளித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். யாரோ ஒருவரின் கருத்தை கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக ஏற்க முடியாது என தெரிவித்தார்.

பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்

பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை

Published: 

18 May 2025 14:41 PM

சென்னை மே 18: தமிழக வெற்றி கழகம் -பாரதிய ஜனதா கட்சி கூட்டணி (BJP-Tamilaga Vetri Kalazhagam Alliance) குறித்து, தலைவர் விஜய் (Leader Vijay) எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். யாரோ ஒருவரின் கருத்தை கட்சியின் நிலைப்பாடாக பார்க்க முடியாது என்றார். பாஜக கூட்டணி தொடர்பான முடிவுகளை அகில இந்திய தலைமையகமே எடுக்கும் என்றும் கூறினார். தற்போது தேசியவாத சக்திகள் ஒன்று சேர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றார். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை எதிர்க்கும் கொள்கை ஒருமைப்பாடு உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தன் எண்ணம் எனவும் குறிப்பிட்டார். இதன் மூலம் பாஜக – தவெக கூட்டணி குறித்து எந்த உறுதியான முடிவும் இல்லை என்பது வெளிப்படுகிறது.

பாஜக உடன் கூட்டணி இல்லை என்று விஜய் கூறவில்லை: தமிழிசை பதில்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர தமிழிசை, பாஜக உடன் தமிழக வெற்றி கழகம் (தவெக) கூட்டணி வைத்திருக்கவில்லை என துணை பொதுச்செயலாளர் சிடி நிர்மல் குமார் தெரிவித்த பின்னணியில், அந்தக் கருத்தை மிக முக்கியமான அரசியல் விளக்கத்துடன் மறுத்துள்ளார் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். அவர் கூறுவதாவது, யாரோ ஒருவர் கூறிய கருத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்க முடியாது என்றும், கூட்டணி குறித்து பேசுவதற்கான அதிகாரம் தவெக தலைவரிடம் மட்டுமே உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

எப்போது பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கூறப்படும்: தமிழிசை

தமிழிசை மேலும் கூறியதாவது, தற்போது நாட்டின் நிலைமையைப் பார்க்கும்போது, ஒட்டுமொத்தமாக எல்லா தேசியவாத சக்திகளும் ஒன்றிணைய வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளதால், அந்த வகையில் அனைவரும் சேர்ந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கூறினார். பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது, அகில இந்திய அளவிலான பாஜக தலைமையக முடிவாக இருக்கும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகளை யார் நடத்த வேண்டும், எப்போது நடத்த வேண்டும் என்பதும் அந்த தலைமை நிர்ணயிக்கும் விவகாரம் என்றும் அவர் தெரிவித்தார்.

திமுகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணையவேண்டும்: தமிழிசை

மேலும், திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான ஆட்சி முறையை எதிர்க்கும் சக்திகள் அனைவரும் ஒன்றிணையவேண்டும் என்பதே தன் நம்பிக்கை என்றும் கூறிய தமிழிசை, கொள்கை ஒருமைப்பாடு உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமையலாம் எனத் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம், பாஜக மற்றும் தவெக கூட்டணி குறித்து முழுமையான நிலைபாடு இன்னும் வெளிவரவில்லை என்பது தெளிவாகிறது. பாஜக நிர்வாகிகளின் கருத்து என்பது கட்சி நிலைப்பாடு அல்ல என்பது தான் தமிழிசையின் முக்கிய கருத்தாக பார்க்கப்படுகிறது.