Neeraj Chopra 5 Best Throws: முதல்முறை 90 மீ கடந்து சாதனை.. நீரஜ் சோப்ரா இதுவரை பதிவு செய்த அதிகபட்ச டாப் 5 த்ரோஸ்..!

Doha Diamond League 2025: தோஹா டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தனது வாழ்நாளின் சிறந்த சாதனையை படைத்தார். இந்த சாதனையின் மூலம் அவர் உலகின் 25வது சிறந்த ஈட்டி எறிபவராகவும் ஆசியாவில் மூன்றாவது இடத்தை பிடித்தவராகவும் ஆனார். இருப்பினும், இந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பெற்றார். நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் யான் ஜெலெஸ்னியின் உலக சாதனை 98.48 மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

Neeraj Chopra 5 Best Throws: முதல்முறை 90 மீ கடந்து சாதனை.. நீரஜ் சோப்ரா இதுவரை பதிவு செய்த அதிகபட்ச டாப் 5 த்ரோஸ்..!

நீரஜ் சோப்ரா

Published: 

17 May 2025 14:20 PM

இந்தியாவின் தங்க மகன் என்று அழைக்கப்படும் நீரஜ் சோப்ரா (Neeraj Chopra) நேற்று அதாவது 2025 மே 16ம் தேதி இரவு புதிய வரலாறு படைத்தார். அதாவது தோஹா டயமண்ட் லீக்கில் (Doha Diamond League 2025) நீரஜ் சோப்ரா 90 மீட்டருக்கு அதிகமான தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார். நீரஜ் சோப்ரா தனது 3வது முயற்சியிலேயே 90.23 மீட்டர் ஈட்டி எறிந்து தனது வாழ்க்கையில் முதல் முறையாக 90 மீட்டர் தூரத்தை கடந்தார். இருப்பினும், இந்த லீக்கில் நீரஜ் சோப்ரா 2வது இடத்தை பிடித்தார். அதேநேரத்தில், தோஹா டயமண்ட் லீக்கில் ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடத்தை தட்டு என்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஈட்டு எறிதல் போட்டியில் மற்றொரு இந்திய வீரரான கிஷோர் ஜெனா 78.60 மீட்டர் தூடன் எறிந்து 8வது இடத்தை பிடித்தார். இந்தநிலையில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இதுவரை அதிகபட்சமாக எறிந்த தூரத்தை தெரிந்து கொள்ளலாம்.

உலகின் 25வது வீரர்:

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, 90 மீட்டர் தாண்டி எறிந்த உலகின் 25வது வீரராகவும், ஆசியாவில் மூன்றாவது வீரராகவும் ஆனார். சமீபத்தில் நடந்து முடிந்த 2024 பாரிஸ் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் (92.97 மீ) மற்றும் சீன தைபேயின் சாவோ சன் செங் (91.36 மீ) ஆகியோர் 90 மீட்டருக்கு மேல் எறிந்த மற்ற ஆசிய தடகள வீரர்கள் ஆவர்.

உலகளவில் இதுவரை யார் முதலிடம்..?

உலகளவில் இதுவரை அதிக தூரம் ஈட்டி எறிந்த சாதனையானது தற்போதைய நீரஜ் சோப்ராவின் பயிற்சியாளர் யான் ஜெலெஸ்னியின் பெயரில் உள்ளது. இவர் கடந்த 2025 பிப்ரவரி மாதம் முதல் நீரஜ் சோப்ராவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சி அளித்த 3 மாதங்களுக்குள் நீரஜ் சோப்ராபை 90 மீட்டருக்கும் அதிகமாக ஈட்டியை எறிய செய்தார். ஜெலெஸ்னி மூன்று முறை ஒலிம்பிக் சாம்பியனும் ஆவார். 1992, 1996 மற்றும் 2000 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற ஜெலெஸ்னி, எல்லா காலத்திலும் சிறந்த 10 எறிதல்களில் 5 எறிதல்களைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1996ம் ஆண்டு ஜெர்மனியில் 98.48 மீட்டர் எறிந்து யான் ஜெலெஸ்னி உலக சாதனை படைத்தார். இதுவரை இந்த சாதனையை எவராலும் முறியடிக்க முடியவில்லை.

நீரஜ் சோப்ராவின் டாப் 5 சாதனைகள்:

வ. எண்   தூரம்   போட்டியிட்ட நிகழ்வு     தேதி
1.   90.23 மீட்டர்   தோஹா டயமண்ட் லீக் 2025   16 மே, 2025
2.   89.94 மீட்டர்   ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் 2022   30 ஜூன், 2022
3.   89.49 மீட்டர்   லொசேன் டயமண்ட் லீக் 2024   22 ஆகஸ்ட், 2024
4.   89.45 மீட்டர்   பாரிஸ் ஒலிம்பிக் 2024   08 ஆகஸ்ட், 2024
5.   89.34 மீட்டர்  பாரிஸ் ஒலிம்பிக் 2024 தகுதிச் சுற்று   06 ஆகஸ்ட், 2025